அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள் 58-1005M 1. சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. நான், “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்” என்று தாவீதினால் கூறப்பட்டது என்று நினைக்கிறேன். ஞாயிறு முழுவதும் உள்ள மற்ற நேரங்களிலும், ஆராதனையின் மற்ற பாகங்களிலும் இல்லாதிருக்கிற ஏதோ ஒன்று ஞாயிறு பள்ளியில் உள்ளது. நாம் ஒரு நல்ல இரவு இளைப்பாறுதலிலிருந்து விழித்தெழுந்துள்ளோம். நாம் சற்று வித்தியாசமாக உணருகிறோம். நீங்கள் புத்துணர்ச்சியூட்டப்பட்டு, அந்நாளுக்காக ஆயத்தமாகியிருக்கிறீர்கள். 2 இப்பொழுது நாம் அதைப் புரிந்து கொள்கிறோம்…சென்ற இரவு நாம் ஜனங்கள் தங்களுடைய சொந்தச் சபையை உடையவர்களாயிருக்கிறார்களா…என்று அவர்களிடம் கேட்டோம். இங்கு வருகைத்தருகையில் இல்லை—இல்லை…நான் வழக்கமான சபைகளின் அங்கத்தினர்களைக் குறித்துக் கூறுகிறேன். அதாவது அவர்கள் தங்களுடையச் சொந்த சபையில் இந்தக் காலை பங்கேற்க வேண்டும். காரணமென்னவெனில் நாம் ஸ்தாபன பாகுபாடற்றவர்களாயிருக்கின்றபடியால், நாம் ஜனங்களை அவர்களுடைய சொந்த சபையிலிருந்து சேர்த்துக்கொள்ள விரும்புகிறதில்லை. 3 மற்ற சபைகளைக் கண்டிப்பதைக் குறித்து அநேக நேரங்களில் நான் குற்றம் சாட்டப்பட்டு வருகிறேன். அது தவறாகும். நான் மற்ற சபைகளைக் குற்றசாட்டுகிறதில்லை. நான் அநேக நேரங்களில் அவர்கள் மன்னித்துவிடுகிற காரியங்களையே குற்றஞ்சாட்டுகிறேன். ஆனால் நான் நிச்சயமாக சபைகளைக் குற்றஞ்சாட்டுகிறதில்லை. ஆனால், அநேக சமயங்களில் அவர்கள் வேத வாக்கியங்களுக்கு முரண்பாடானக் காரியங்களைப் போதிக்கும்போது, அப்பொழுதே நான்—நான் அதை கண்டிக்கிறேன். அதன்பிறகு அவர்கள் பாவமுள்ள காரியங்களைச் செய்யும்போதும், அவர்களுடைய சபைகளில் அது செய்யும்படி அனுமதிக்கும்போதுமே நான் அதைக் கடிந்து கொள்கிறேன். ஆனால் ஒருபோதும்…அது…இந்த விதமாக கூறப்பட்டுள்ளது…நான் இங்கு அமர்ந்துள்ள அநேக கத்தோலிக்க நண்பர்களை உடையவனாயிருக்கிறேன். ஆனால் நான் ஒருபோதும் கத்தோலிக்க ஜனங்களைக் கடிந்து கொள்கிறதில்லை. நான் கத்தோலிக்க சபையின் உபதேசத்தையே கடிந்து கொள்கிறேன். ஏனென்றால் அது வேதப்பிரகாரமாயில்லையென்றே நான் நம்புகிறேன். நான் அவர்களைக் கடிந்து கொள்வதைக் காட்டிலும், அநேக பிராட்டெஸ்டெண்ட் ஸ்தாபனங்களையும் கடிந்து கொள்கிறேன். ஏனென்றால் அதுவும் வேதப் பிரகாரமானதல்ல என்றே நான் கருதுகிறேன். நான் சத்தியத்திற்காக நிற்க கடமைப்பட்டுள்ளேன். புரிகின்றதா? நீங்கள் நேர்மையாகவும், உத்தமமாயும் இருப்பீர்களேயனால் தேவன் உங்களை உயர்வாக மதிப்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 4 அநேக சமயங்களில் மனிதன் மனைவியைத் தேடுகிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு உண்மையான மனிதன் தனக்குப் பின்னே ஒரு நல்ல மனைவியை உடையவனாயிருக்கிறான். அவன் மிகவும் அழகான முகத்தைக் கொண்ட பெண்ணைத் தேடுகிறதில்லை. அது இந்நாட்களொன்றில் இழக்கப்படும் என்பதை அவன் அறிந்திருக்கிறான். பார்த்தீர்களா? அவன் ஒரு உண்மையான ஸ்திரீயை, ஸ்திரீக்கான பண்பினைக் கொண்டுள்ள ஸ்திரீயையே எதிர்நோக்குகிறான். அவள் விசுவாசமுள்ளவளாயும், ஒரு உண்மையுள்ள ஸ்திரீயுமாயிருந்தால், அந்த மனிதன் அவளைப் பாராட்டுவான். அவன் எவ்வளவு ஒரு—ஒரு மோசமான நபராயிருக்கிறானென்றும், அவன் எவ்வளவுதான் மோசமான ஸ்திரீகளோடு சுற்றுகிறவனாயிருக்கிறான் என்றும் நான் பொருட்படுத்துகிறதில்லை. ஆனால் உண்மையிலேயே ஒரு ஸ்திரீ என்னவாயிருக்க வேண்டுமோ அதற்கான நிலையில் நிற்கும் ஒரு ஸ்திரீயை பாராட்டாத எந்த மோசமான மனிதனும் உலகத்தில் இல்லை. அது உண்மை. ஏனென்றால் அவன் அதைப் பாராட்டுகிறான். 5 அந்த விதமாகவே வார்த்தையைப் பிரசங்கித்தலிலும் உள்ளது. ஒரு மனிதன் அவன் விசுவாசிக்கிறதைக் கொண்டு நிற்பானேயானால் நலமாயிருக்கும். இப்பொழுது இல்லை…தேவன் உங்கள் இருதயத்தை அறிந்திருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையிலேயே சத்தியத்தை விசுவாசிப்பதின் மூலம் நிற்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்களோ, அதில் உங்களுக்கு விசுவாசமிருக்கக்கூடும். 6 எனக்கு இங்கே இரண்டு நல்ல நண்பர்கள் உண்டு. சகோதரன் சார்லி காக்ஸ் (Charlie Cox) அங்கே அமர்ந்திருப்பதை நான் காண்கிறேன். கடந்த சில வாரங்கள் நான் அவரோடு அணில் வேட்டைக்காக கென்டக்கியில் இருந்தபோது, நான் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டேன். சகோதரன் பாங்க்ஸ் உட். (Banks Woods). இப்பொழுது நாங்கள் எங்களுடைய துப்பாக்கிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள்…நான் என்னுடையதை ஐம்பது கெஜ தூரத்தில் சரியாக சுடும்படி மிகவும் பரிபூரணமாக வைத்துக் கொண்டிருப்பேன். இல்லையென்றால் என்னால்—என்னால் வேட்டையாட இயலாது. புரிகிறதா? அவ்வளவுதான். 7 பாருங்கள், அவ்வாறு சரியாக குறிவைத்து சுடுவது என்ன நன்மையைச் செய்கிறது? பார்த்தீர்களா? காரணம் நீங்கள் அணிலை சுடுவீர்களேயானால், அதைத் தலையில் சுடுவீர்களேயானால், அதனுடையத் தலை அநேகமாக அந்தளவு பெரிய வட்டமாக இருக்கும். அதற்குள் எங்காகிலும் ஒரு அங்குலம் குண்டு பாய்ந்திருந்தால் சரியாயிருக்கும். பாருங்கள், அங்கே அதற்குள் எங்காகிலும் சுடப்பட்டிருந்தால் சரி. அந்தப் பையன்களில் யாராவது ஒருவன், “அது எல்லாம் சரி, நான் அணிலைச் சுட்டுவிட்டேன்” என்பான். அப்பொழுது அவர்கள் போய் அந்த அணிலைக் கொண்டு வாருவார்கள். ஆனால் எனக்கோ, அது பரிபூரணமாயிருக்க வேண்டும். அது அந்தக் குறியிடத்தில் சுடப்பட்டிருக்க வேண்டும். அது ஒரு கால் அங்குலம் அளவும் தவறக்கூடாது. அது அந்தக் குறியிட்ட இடத்திலேயே சுடப்பட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் நான் நரம்புணர்வு பாதிப்பைப் பெற்று நிலைகுலைந்து விடுகிறேன். 8 நான் அன்றொரு நாள் காட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “கர்த்தாவே, நான் ஏன்?—ஏன் இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரனாக இருக்கிறேன்? நீர் ஏன் என்னை இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரனாக உண்டாக்கினீர்?” என்று கூறிக் கொண்டிருந்தேன். பின்பு நான், “இப்பொழுது அங்கே… 9 சகோதரன் பாங்க்ஸ் தன்னுடையக் கைத்துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றார். அவர் தூரதரிசினி கண்ணாடிகளின் பார்வையின் மூலம் அதற்குள் சுடும்படி அதனை இழுத்தார். நீங்கள் வெறுமனே…எப்பொழுதாவது ஒருமுறை நீங்கள்…அதிலிருந்து ஒன்று வெளிச்செல்லும், காரணம் அது…எப்படியாயினும் நிறுவனம் துப்பாக்கியில் நிரப்ப தயாரிக்கும் வெடிமருந்தே அதைச் செய்யும், ஏனென்றால் நீங்கள் நிறைய வெடி மருந்து ரவைகளையும், சற்று சிறிய வெடி மருந்து ரவைகளையும் உபயோகப்படுத்துகிறீர்கள். ஆனால் அதுவே சற்றுத் தள்ளி அல்லது ஒரு அங்குலம் அல்லது இரண்டு அங்குலம் தள்ளிச் சுடச் செய்கிறது. ஆனால் சகோதரன் பாங்க் அவர்களோ, “ஓ, அது பரவாயில்லை, நான் அணிலைச் சுட்டு விட்டேன். அவ்வளவுதான்” என்கிறார். அது அவரைத் தொல்லைப்படுத்துகிறதில்லை. சார்லி அவர்களுக்கும் அது அதேவிதமாக தொல்லைப்படுத்துகிறதில்லை. ஆனால் எனக்கோ… 10 எனக்கோ வட்டத்தின் மையத்தில் சுடவேண்டும், இல்லையென்றால் அது என்னை நிலைகுலையச் செய்கிறது. அப்பொழுது நான், “வழக்கமாகவே பாதிப்புக்குள்ளானவனைப் போலாகிவிடுகிறேன்” என்று கூறினேன். அதன் பின்னர் நான் சற்று பின்னோக்கி நினைத்துப் பார்க்கத் துவங்கினேன். அப்பொழுது என் வாழ்க்கையும் அந்தவிதமாகவே இருக்கிறது என்பதை நான் கன்டறிகிறேன். அதுவே என்னுடைய ஜீவிய அமைப்பின் மாதிரியாயிருக்கிறது. பின்பு நான், “நல்லது, நீர் ஏன் என்னை அந்தவிதமாக உருவாக்கினீர்?” என்று எண்ணினேன். அது சற்று நகர்ந்து அந்த வழியாக அல்லது அந்த வழியாக செல்லுமேயானால் அப்பொழுது அது எனக்கு நரம்புணர்வு பாதிப்பையும்கூட உண்டாக்குகிறது. அப்பொழுது அந்தவிதமாகவே நாங்கள் வேட்டையாட உட்கார்ந்திருந்த அந்த கல்ட்டன் ஹாலோ (Glutton Hollow) என்ற இடத்தில் கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினார். அது டட்டன் என்று அழைக்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் அணில்கள் அங்கு மிகவும் வேகமாகவே சாப்பிடுகின்றன. எனவே நான் அதைப் “பெருந்தீனிக்காரன் என்னும் இடம்” என்றே அழைக்கிறேன். ஆகையால் அவர்கள்… 11 இந்த இடத்தில்தான், நான், “அதுதான் இது” என்று எண்ணினேன். நரகம் என்ற ஒன்று உண்டு என்று நான் உறுதியாக அதைக் குறித்து அறியும் வரையில் நான் அதைக் குறித்துக்கூட போதிக்கவேயில்லை. புரிகின்றதா? வேதம் தெய்வீக சுகமளித்தலை முன்னறிவிக்க, இங்கோ அது இந்த விதமாகவும், அந்தவிதமாகவும் காணப்பட்டாலும், கவலைப்பட வேண்டியதில்லை. மூன்று தேவர்கள் உள்ளனர் என்பதைப் போன்று ஒரு வேதவாக்கியம், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” போன்று கூறினாலும், நான் அங்கே ஒரே ஒருவர் மாத்திரமே உண்டு என்பதைக் காண்கிறேன். அப்படியிருக்க நான் எப்படி அதைக் குறித்த வேறு யாரோ ஒரு மனிதனுடைய கருத்தை, அவர்கள் அதைக் குறித்துக் கூறுகிறதை அந்தவிதமாகவே, தற்செயலாக எடுத்துக் கொள்ள முடியும். வேதம் முன் குறித்தலையும், கிருபையையும், குறித்து பேசுமேயானால், இதோ அது கிரியை செய்கிறது. இதோ அது கிருபையைப் பெற்றுள்ளது. எனவே அவர்கள் கூறுகிறவிதமாக என்னால்—என்னால் அதைப் பிரசங்கிக்க முடியாது. 12 அது உண்மையாகவே வேத வாக்கியங்களினூடாக பரிபூரணமாக வரும்வரை, அதைப் பரிபூரணமாக பொருத்தும் வரை நான் அதற்கு வேதாகமத்தினூடாவே தீர்வைக் காண வேண்டும். அப்பொழுதே நான் நிற்கும்போதும், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதிலும், பாருங்கள், நீங்கள் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறது சத்தியமாயிருக்கிறது என்பதை அறியும்போதே, எனக்கு அதில் உண்மையாகவே விசுவாசம் உண்டாயிருக்கும். புரிகின்றதா? அப்பொழுது எவரேனும் அதைக் குறித்து எதிர்மாறாக புரிந்துகொண்டால், அவர் சரியாக என்ன கூறுகிறார் என்பதை நீங்கள் போதுமான அளவு ஆய்ந்து படித்துள்ளபடியால், அந்த நபரை எங்கே தடுத்து நிறுத்தி, பார், இதோ சரியாக இங்கே இருக்கிறது என்று கூற நீங்கள் அறிந்திருப்பீர்கள். புரிகின்றதா? அந்த விதமாகத்தான் அது உள்ளது. தேவன் நம்மை வித்தியாசமான வழிகளில் உண்டாக்குகிறார். அதாவது நாம் வெறுமனே, எளிமையாக…அதுவே உலகத்தை அந்தவிதமாக்குகிறது. நல்லது, அந்த விதமாகவே அது எனக்கு நரம்புணர்வு பாதிப்பை உண்டாக்கி, ஒரு நிலைகுலைந்த நபரைப் போன்றாக்குகிறது. அது சரியாக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. 13 நான் கர்த்தராகிய இயேசு மரித்துவிடவில்லை என்பதை நான் அறிந்துள்ளேன் என்று கூறுவதற்காக இன்றிரவு இந்த—இந்தக் காலையில் நான் மிகவும் மகிழ்ச்சியுடையவனாயிருக்கிறேன். அவர் உயிரோடிருக்கிறார். அவர் உலகத்தில் இருந்தபோது, கலிலேயாவிலும், மற்றெங்கும் எந்த நேரத்திலும் இருந்ததுபோலவே இப்பொழுதும் இங்கே இருக்கிறார். அவர் ஜீவிக்கிற, உயிர்த்தெழுந்த, சர்வவியாபியான ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாயிருக்கிறார். அது…என்னால்…முடியவில்லையென்றால்… 14 நான் சரித்திரப்பிரகாரமான தேவனைக் குறித்த ஏதோ ஒரு வேதவாக்கியத்தை போதித்திருப்பேனேயானால், அப்பொழுது நான் அவர் இங்கே இருந்தார் என்பதைக் குறித்து நான் நிச்சயமுடையவனாய் இருந்திருக்கமாட்டேன். நான்—நான் முழுமையாக குழப்பமடைந்திருப்பேன். அது எனக்கு மிகுந்த நரம்புணர்வு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அப்பொழுது நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதையே அறியாதிருந்திருப்பேன். புரிகின்றதா? எங்கே ஜனங்களுக்கு கூற வேண்டும் என்பதையும் நான் அறியாதிருப்பேன். “நல்லது, இப்பொழுது அவர் இதைச் செய்வார், அல்லது அவர் அதைச் செய்வார்”. என்னால்—என்னால் அதை உங்களுக்குக் கூறமுடியாது. எனக்குத் தெரியாது. ஆனால் அவர் செய்வதாக வாக்களித்தார் என்பதை நீங்கள் அறியும்போது, அப்பொழுது நீங்கள் என்ன நிலைமையில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். புரிகின்றதா? எப்படித் தேவன் தம்முடைய மகத்தான திட்டங்களில் இருக்கிறாரென்றும், ஒவ்வொரு நபரையும் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு உருவாக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளார் என்பதையும் பாருங்கள். ஏனென்றால் அவர் அவர்களை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்போகிறார். 15 சற்று முன்பு இங்குள்ள அந்தச் சிறிய பெண்மணி பாடினதை நீங்கள் கேட்டீர்களா? திருமதி.ஸ்டிரிக்கர் (Stricker) அவர்கள் எவ்வித இசையுமின்றி பாடுகின்றார். அவள் ஏதோ ஒரு விதமான ஒரு சிறு கருவியை வைத்துக்கொண்டு, அவள் தன்னுடைய—தன்னுடைய இராகத்தை அதனூடாக ஊதிக்கொண்டே, தன்னுடைய சுருதியை அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைப்பீர்களோ? அதை அதன் மூலம் இசைத்தாள். அவளால் நின்று அதை உண்மையாகவே தாழ்வான குரலில் பாடி, பின்னர் அதை ஷிப் ஹாய்! என்று உயர்த்திப் பாடவும் முடிந்தது. இப்பொழுது நான் சில நேரத்தில் பாட முயற்சிப்பதை நீங்கள் கேட்க வேண்டும். [சகோதரன் பிரான்ஹாமும் சபையோரும் சிரிக்கின்றனர்—ஆசி.] அது பயங்கரமாயிருக்கும். ஆனால் நீங்கள் பாருங்கள், தேவன் அவளை அதைப் பாடச் செய்யும்படி அந்தப் பெண்மணியை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார். 16 அதுவே வழியாயிருக்கிறது. நாம் எல்லோருமே வித்தியாசப்பட்ட உருவ அமைப்புகளை உடையவர்களாயிருக்கிறோம். நாம் கிறிஸ்துவுக்குள்ளான நம்முடைய ஸ்தானத்தை கண்டறிந்து, அங்கேயே தரித்திருந்து அவரைச் சேவிப்ப்போமேயானால் நலமாயிருக்கும். 17 இந்தக் காலையில் இங்கே ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள ஒரு சிறு பெண்ணைப் பார்க்கிறேன். உன்னுடைய சிறு இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. தேனே, நீ எதனால் முடமாக்கப்பட்டாய்? தசை…ஓ, நான் அந்த வார்த்தையைக் கூறத் துவங்கின போதே, என்னால் அந்த வார்த்தையைக் கூறமுடியவில்லை. சதை வளர்ச்சியினால் பலங்குன்றிப்போகுதல் அல்லது அது வேறென்னவாகவோ இருந்தது. இனிய இருதயமே அதுதானா இது, அதுதான் உன்னை முடமாக்கினதா அல்லது இது இளம்பிள்ளை வாதமா? இளம்பிள்ளை வாதம். இயேசு சிறு பெண்களை குணமாக்குகிறார் என்பதை நீ அறிவாய். அவர் சுகமாக்குகிறதில்லையா? நீ ஒரு பருமனான அழகான சிறு பெண்ணாய் இருக்கிறாய். இயேசு உன்னைக் குணமடையச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். 18 கடந்த இரவு அந்த சிறு பெண்பிள்ளைகள் இங்கே வியாதியோடு உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்த வியாதி என்ன என்பதை இந்த உலகில் உள்ள எந்த நபரும் அறிந்திருக்கக்கூட மாட்டார்கள். அவர்களுடைய சிறு விரல்கள் அழுகி உதிருகின்றன. அவர்களுடைய சிறு பாதங்களும்கூட அவ்வாறே உதிருகின்றன. இரண்டு அழகான சிறு பெண்பிள்ளைகள். நான் அவர்களுடைய தாயாரையும், அவர்களுடைய பாட்டியையும் அறிந்து கொள்ள நேர்ந்தது. அப்பொழுது நான் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த சிறுபிள்ளைகளை துன்புறுத்தும் அந்தப் பிசாசை உடனடியாக கடிந்து கொள்ளும்படிக்கு வழி நடத்தப்படுவதை உணர்ந்தேன். அவர்கள் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து வந்திருந்தனர். அவர்கள் எவ்வளவு காலம் அவ்வாறு இருந்து வந்தனர் என்பதை நான் அறியேன். கடந்த இரவோ, “அந்த சிறுபெண்பிள்ளைகள் எழும்பி சுற்றி நடந்து கொண்டிருக்கிறார்கள்” என்ற செய்தி எங்கும் வேகமாகப் பரவிற்று. தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு மிகவும் கிருபையுள்ளவராயிருந்தார் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஓ, அவர் நமக்கும் மிகவும் நல்லவராகவே இருக்கிறாரே! நாம் அவரை அதிகமாகப் பாராட்ட வேண்டும். 19 கடந்த இரவு நான் வீட்டிற்குச் சென்ற பிறகு, படுத்துக் கொண்டு ஒரு சில நிமிடங்களாக இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான், “ஆத்துமா ஒரு மனிதனை விட்டுச் செல்லும்போது, அது என்னவாயிருக்கிறது?” என்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது அவனுடைய உள்ளான மனுஷன் வெளியே சென்றுவிடுகிறதாயிருக்கிறது. அவன் மரிக்கவில்லை. அவன்—அவன் இன்னமும் உயிரோடிருக்கிறான். புரிகின்றதா? அவன்—அவன் என்றென்றைக்குமாய் ஜீவிக்கிறான். இந்தத் திரைக்கு அப்பால் கடந்து சென்றிருக்கிற நம்முடைய அன்பார்ந்தவர்கள் நாம் என்னவென்று அறியாத ஒரு சரீரத்தில் இருக்கின்றனர். அது வெளிப்படுத்தப்படவில்லை. 20 ஒவ்வொரு காரியத்திலும் மூன்று கட்டங்கள் உண்டு. அழிவுள்ள சரீரம் என்பது ஒரு கட்டமாகும். பின்னர் அழிவில்லாத சரீரம். அதன் பின்னர் மகிமையின் சரீரமாகும். புரிகின்றதா? அதேபோன்றே மற்ற காரியங்களும் உள்ளன…பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதும் ஒரு வழியில் செல்கிறது. மூன்றும் ஒன்றையே உருவாக்குகிறது. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதும் ஒரே வழியில் இருந்து ஒன்றையே உருவாக்குகிறது. அதன் பின்னர், ஆத்துமா, சரீரம் மற்றும் ஆவியும் ஒன்றையே உருவாக்குகிறது. அது மூன்றில் தொடர்ந்து செல்கிறது. மூன்றும் ஒன்றாயிருக்கிறது. மும்முனை கொண்ட ஒரு—ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து, அதைச் சூரிய வெளிச்சத்தில் வைத்தால் அது நிறங்களைப் பிரதிபலிக்கும். அதே சமயத்தில் ஏழு நிறங்களும் அந்த ஒன்றிற்கு உண்டாகும். 21 நீங்கள் சிகப்பு நிறத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தச் சிகப்பு நிறத்தைச் சிவப்பு நிறத்தினூடாக நோக்கிப் பாருங்கள். அப்பொழுது அது என்ன நிறமாய்க் காணப்படும் என்பதை எத்தனைபேர் அறிவீர்கள்? [சபையோர், “வெண்மை” என்கின்றனர்—ஆசி.] வெண்மை நிறம், ஹூம்—ஹூம். அது விநோதமாயில்லையா? அதாவது சிகப்பு நிறத்தைச் சிகப்பு நிறத்தினூடாக நோக்கிப் பார்க்கும்போது வெண்மை நிறம் காணப்படுகிறது. சிகப்பு நிறம் மீட்பின் அடையாளமாயிருக்கிறது. நீங்கள்…தேவன் நம்முடைய சிவந்த பாவங்களை அவருடைய விலையேறப் பெற்ற குமாரனின் சிவந்த இரத்தத்தினூடாக நோக்கிப் பார்க்கிறார். அப்பொழுது அவைகள் வெண்மையாயிருக்கின்றன. ஆகையால், ஆனால், அவர் இரத்தத்தினூடாக நோக்கிப் பார்க்க வேண்டியவராயிருக்கிறார். அப்படி நோக்கிப் பார்க்கவில்லையென்றால் அவைகள் பாவமுள்ளதாக இருக்கும். ஆகையால் நாம் இரத்தத்தின் கீழாக இருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 22 ஆத்துமாவானது சரீரத்தை விட்டுச் செல்லுகிறபோது, அது இந்தச் சரீர அமைப்பில் உருவான ஒரு சரீரத்திற்குள்ளான இளைப்பாறும் ஸ்தலத்திற்குள்ளாக தன்னுடையப் பயணத்தை மேற்கொள்கிறது. ஆனால் அது இந்த மாதிரியான சரீரம் அல்ல. நீங்கள் உங்களுடைய அன்பார்ந்தவர்களை சந்திப்பீர்கள். நீங்கள் அவர்களுடையக் கரங்களைக் குலுக்க முடியாது. உங்களால் அவர்களிடத்தில் பேசமுடியும். உங்களால் அவர்களைப் பார்க்க முடியும். அவர்கள் இங்கே இருந்தது போலவே அங்கும் காணப்படுவார்கள். காரணமென்னவெனில், பேதுரு, யோவான், யாக்கோபுவும் மோசேயையும், எலியாவையும் கண்டபோது, அவர்கள் இவர்களை மறுரூபமலையின் மேல் அடையாளங்கண்டு கொண்டனர். ஆனால் அது ஒரு சரீரமாயிருக்கிறது. 23 அதன்பின்னர் அந்தச் சரீரமானது, வானத்திற்குரிய ஒரு வகையான சரீரமானது, அது பூமிக்குத் திரும்புகிறபோது, அது ஏற்கனவே ஜீவித்த அந்தச் சரீரத்தின் பகுதியை எடுக்கிறது. அப்பொழுது அந்தச் சரீரம் ஒரு மகிமையின் சரீரமாகிறது. அந்தச் சரீரத்தில்தான் நாம் கர்த்தராகிய இயேசுவையும், அவருடைய உயிர்த்தெழுந்த சரீரத்தையும் காண்போம். பவுல், “இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” என்றான். 24 இந்த எல்லா சுருக்கம் விழுந்த வயோதிகக் கரங்களும், உடைந்துபோன உடலின் ஆக்க மூலப்பொருட்களும் மென்மையான இளமைக்குள்ளாக மங்கிப்போகும். வயோதிக புருஷர்களும், ஸ்திரீகளுமாகிய நீங்கள், நினைவில் கொள்ளுங்கள். நீங்கள்…இது…அது, அது உங்களுடைய வயோதிகக் காலத்தின் முதிர்ந்து போகுதலின் ஒரு அடையாளமாகும். ஆனால் உயிர்த்தெழுதலிலோ அவர்களுக்குப் பாவத்தின் எந்த ஒரு அடையாளமும் காணப்படாது. ஆனால் தேவன் அவரை உண்டாக்கினது போலவே ஏன் உங்களை உண்டாக்கினார்? அவர் உங்களை ஒரு குறிப்பிட்ட வயது வரைக் கொண்டு வந்தார். நீங்கள் சுமார் இருபத்திரண்டு, இருபத்திமூன்று வயதாயிருக்கும்போது, நீங்கள் மிகச் சிறப்பாயிருந்தீர்கள். அப்பொழுது நீங்கள் உணவை உட்கொண்டு பலமடைந்து, ஆரோக்கியமாயிருந்து வந்தீர்கள். நீங்கள் என்னே ஒரு வல்லமையுள்ள—தோற்றமளிக்கும் நபராயிருந்தீர்கள். அதன்பின்னர், பாருங்கள், உங்களுக்குச் சுருக்கங்கள் விழுந்து, பாருங்கள், மரணம் தோன்றுகிறது. ஆனால் உயிர்த்தெழுதலில் எல்லா வயோதிபமும் மறைந்துபோகும். 25 நான் இங்கே ஒரு வயோதிக பிரசங்கியாரையும், அவருடைய மனைவியையும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் தங்களது எண்பதாவது வயதினைக் கடந்தவர்களாயிருக்கின்றனர் என்று நான் யூகிக்கிறேன். சகோதரன் மற்றும் சகோதரி கிட் அவர்களும் ஒருவேளை நான் பிறப்பதற்கு முன்னமே சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கலாம். நானே வயோதிக மனிதனாயிருக்கிறேன். அவர்கள் இங்கே சமாதான தோற்றத்தோடு வயோதிகத் தம்பதிகளாக அமர்ந்திருப்பதை நான் காண்கிறேன். அவர்கள் அந்த உயிர்த்தெழுதலில் எந்தவிதமாக காணப்படுவார்கள் என்று நான் சற்று எண்ணிப் பாக்கிறேன். அவர்களின் வயோதிக சுருக்கங்களும், நடுக்கத்தோடு ஆடிக் கொண்டிருக்கும் கரங்களும், முடக்குவாதமும், நரைத்த முடிகளும், மென்மையான இளமைக்குள் மறைந்து போகும். அது உண்மையாகவே கர்த்தரைச் சேவிக்கும்படி அளிக்கப்படுகிறது. அது உண்மையாகவே அவ்வாறு வழக்கப்படுகிறது. நாம் என்றோ ஒருநாள் அவரைக் காண்போம். 26 ரோஸல்லா கிரிப்பத் (Rosella Griffith) அவர்கள் இப்பொழுது இங்கிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் அவளை ஒரு வார்த்தை கூறவைக்கும்படி விரும்புகிறேன். இங்கே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுமீறிய குடிபோதைக்கு அடிமையான ஒரு பெண்மணி சுகமாக்கப்பட்டாள். அது இங்குள்ள அதேவிதமாக மட்டுமீறிய குடிபோதைக்கு அடிமையான சிலருக்கு உதவியாயிருக்கலாம். [சபையில் உள்ள்ள ஒரு சகோதரி, “சகோதரன் பிரான்ஹாம், அவள் இந்தக் காலையில் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்” என்கிறாள்.—ஆசி.] அவள் இந்தக் காலை வீட்டிற்குச் செல்ல வேண்டியதாயிருந்தது. சரி, அற்புதமான உதாரணமாயிற்றே! கடந்த இரவே நான் அவளை ஏதோ ஒன்றைக் கூற வைத்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அவள் இந்தக் காலையில் செல்லப்போவதாயிருந்தாள் என்பதை நான் அறிந்திருந்தால் அவ்வாறு செய்திருப்பேன். ஆகையால் நான் கூடாரத்தின் அங்கத்தினர்கள் அநேகக் காரியங்களைக் கேட்கும்படி விரும்புகிறேன். 27 இப்பொழுது இக்காலையில் இங்கு எவரேனும் தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்படவிருக்கிறீர்களா? நாம் பார்ப்போம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழுபேர்கள் இங்கே ஞானஸ்நானம் பண்ணப்படவிருக்கின்றனர். இந்த ஞாயிறு பள்ளி பாடத்தைத் தொடர்ந்து ஞானஸ்நான ஆராதனை இருக்கும். 28 இப்பொழுது நம்முடைய சகோதரி ஆர்னால்ட், அவளுடைய சிறுபிள்ளைகளுக்காக வழக்கமாக ஞாயிறு வேதபாட பள்ளி நடத்தப்படும் அறையில் நடைபெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. சகோதரி ஆர்னால்ட் நாங்கள் அதை நாளையத் தினம் வரையில் ஏறக்குறைய ஞாயிறு பள்ளியை நிறுத்தி வைத்துள்ளோம். ஏனென்றால் எங்களுக்கு ஞாயிறு ஆராதனைக்கே அறைகள் இல்லை. நான் இன்னும் ஒரு சில நிமிடங்களில் இங்கே சில வேதவாக்கியங்களை வாசிப்பேன். ஏனென்றால் அது சிறு பிள்ளைகளுக்கும்கூட அதைக் குறித்து சிந்திக்கும்படியான ஏதோ ஒன்றை அவர்களுக்கு அளிக்கும். அதன் பின்னர் அடுத்த ஞாயிறு நீங்கள் வேதபாட பள்ளியையும் தொடரலாம். இப்பொழுது நாங்கள் கூற விரும்புவது… 29 இக்காலையில் நான் இங்கே மற்றொரு காரியத்தைக் கூற விரும்புகிறேன். நான்—நான்—நான் இதைச் செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதை எப்படியோ செய்து விட்டனர். பார்த்தீர்களா? பாருங்கள், அது கடந்த இரவு என்னிடத்தில் வந்த காணிக்கையாயிருந்தது. நான் அதை எடுக்க வேண்டாம் என்று அவர்களிடம் கூறினேன். பாருங்கள். அவர்கள்…ஆனால் அவர்களோ அதை எப்படியோ எடுத்துவிட்டனர். சகோதரன் டாக் (Doc) அதைப் பில்லியினிடத்திற்கு, அவனுடைய வீட்டிற்குக் கொண்டு வந்திருந்தார் என்று பில்லி என்னிடம் கூறும்வரையில் எனக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. நான் அதை இன்னும் எண்ணிப் பார்க்கவே இல்லை. ஆனால் அது ஏறக்குறைய முந்நூறு அல்லது முந்நூறு டாலர்களுக்கு மேல் சற்று கூடுதலாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். அது…டாக் அது எவ்வளவென்று உமக்கு நினைவிருக்கிறதா? [சகோதரன் எடிகர் பிரான்ஹாம், “இருபத்தி நான்கு டாலர்கள், பன்னிரண்டு சென்டுகள்” என்கிறார்.—ஆசி.] சகோதரனே, அது எவ்வளவாயிருந்தது? [“மூன்று, இருபத்தி—நான்கு, பன்னிரண்டு”] முந்நூற்று இருபத்தி நான்கு டாலர்கள் மற்றும் பன்னிரண்டு சென்டுகள். நான் உங்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 30 இப்பொழுது, நான் நீண்ட காலத்திற்கு முன்பே பணியிலிருந்து நின்றுவிட்டேன். நீங்கள் அதை அறிவீர்கள். இப்பொழுது இருக்கின்ற என்னுடைய செயலாளருக்கும் மற்றும் இக்காலையில் இங்குள்ள சிலருக்கும் என்னுடைய செலவுகள் தெரியும். நான் எங்கேயிருந்தாலும், வீட்டிலிருந்தாலும், என்னுடைய அலுவலக காரியங்களுக்கும் மற்றவைகளுக்கும் உலகம் முழுவதும் அனுப்பப்படும் கைக்குட்டைகளுக்கான செலவினங்கள் யாவும் சேர்ந்து ஒரு நாளைக்கு நூறு டாலர்கள் எனக்குச் செலவாகின்றது. 31 நான்—நான் இதை இங்குள்ள ஜனங்களாகிய உங்களுக்கு ஒரு உற்சாகமூட்டுதலாகக் கூற விரும்புகிறேன். இந்த அளவு கூட்டத்தாரிடமிருந்து நான் என்னுடைய ஜீவியத்தில் எப்போதும் பெற்ற காணிக்கையிலேயே இது மிகப் பெரிய காணிக்கையாகும். அந்தத் தொகையை சராசரி வீதத்தில் பங்கிட்டால் அது ஒருவருக்கு ஒரு டாலர் என்று வரும் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஊழியத்தில் எடுக்கப்படும் காணிக்கைகள் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு சராசரி கணக்கீட்டுத் தொகையாக சுமார் இருபத்திரண்டு அல்லது இருபத்தைந்து செண்டுகளே வரும். ஆனால் இதுவோ ஒரு நபருக்கு ஒரு டாலர் என்ற சராசரி தொகையாக இருந்தது. காரணம், உங்களால் அதை இங்கே உள்ளே கொண்டுவர இயலாது என்பதை…நான் அறிவேன். அவர்கள் வெளியில் காணிக்கைகளை எடுக்கிறதில்லை. சுமார் முந்நூறு ஜனங்களைக் கொண்ட இந்தச் சிறு இடத்தை இன்னும் நீங்கள் நெருக்கடியாக்க முடியுமா என்று நான்—நான் ஐயுறுகிறேன். சகோதரன் நெவில் கூடாரத்தில் இருக்கைகள் எத்தனை என்பதை நீர் அறிவீரா? [சகோதரன் நெவில், “ஏறக்குறைய முந்நூறு இருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் இப்பொழுது உள்ளது” என்கிறார்.—ஆசி.] ஏறக்குறைய முந்நூறு பேர்கள். ஆகையால் பாருங்கள், அது ஒருவருக்குக் கிட்டத்தட்ட ஒரு டாலர் வீதம் என்றாகிறது. நான் அதை எப்படியாய் பாராட்டுகிறேன் என்பதை தேவன் அறிவார். நான் உங்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அது கர்த்தருடைய ஊழியத்திற்கு நேராகச் செல்கிறது. நான்—நான் அதற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனென்றால்…அவர்களில் சிலர் இன்றிரவு முன்னரே செல்ல வேண்டும் என்று இருந்ததால், காரணம்…நான்… 32 கடந்த இரவு நான் வீட்டிற்குச் சென்றபோது, இதைப் போன்ற ஒரு சிறுபெட்டி அங்கே முற்றத்தில் இருந்தது. அது (Jelly) இனிப்பு பலகாரமாயிருந்தது. அது யாரோ ஒருவரிடத்திலிருந்து வந்தது என்று நான் நினைக்கிறேன். நான் எந்த இனிப்பு பலகாரத்தை விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான்—நான் அதைப் பாராட்டுகிறேன். இங்கே ஒரு—ஒரு சகோதரி, நான் அவளுடையப் பெயரைக் கூறாமலிருப்பது மேலானதாகும். அவள் எங்களுடைய குடும்பத்திற்கு ஒரு நெருங்கின சிநேகிதியாயிருக்கிறாள். எனவே அவள் எனக்காகவும், பில்லிக்காகவும் என்னுடைய தாயாரினிடத்தில் ஒரு அன்புப் பரிசைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். சகோதரியே, நான் அதை எவ்வளவாய் பாராட்டுகிறேன் என்பதை நீங்கள் அறியீர்கள். அது என்னே ஒரு நேரத்தில் உள்ளே வந்தது. 33 ஓ, ஆகையால் அநேக காரியங்கள்…நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள். அவர் புரிந்துகொள்கிறார் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். ஆகையால் அவர் உங்கள் ஒவ்வொருவரையும் மிகவும் அதிகமாகவும், நிறைவாகவும் ஆசீர்வதிப்பாராக. நான் உங்கள் ஒவ்வொருவருடனும் வீட்டிற்குச் செல்ல முடிந்து, உங்களோடு சற்று நேரம் தரித்திருக்க முடிந்து, உங்களோடு சற்று நேரம் பேசக்கூடுமானால் நலமாயிருக்கும் என்று நான் விரும்புகிறேன். நான் அதைச் செய்ய விரும்புகிறேன். 34 ஆனால் இதுவோ தொடர்ச்சியாய் எப்படி இடமாற்ற நிகழ்ச்சியில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் மிகவும் துரிதமாகச் செல்ல வேண்டும். வெளிப்படையாகக் கூறினால் இன்றிரவு ஆராதனைக்குப் பிறகு கர்த்தருக்குச் சித்தமானால், ஆராதனை முடிவுற்றவுடனே நான் இந்த மாநிலத்தை விட்டுச் செல்லவுள்ளேன். நான் பன்னிரண்டு மணிக்கு முன்பாகவே இங்கிருந்து செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். எனக்குப் பன்னிரண்டு மணிக்கு சிலரைச் சந்திக்க வேண்டிய நிகழ்ச்சிகள் உள்ளன. இந்தப் பிற்பகல் முழுவதும் எனக்கு அவ்வாறான நிகழ்ச்சிகள் உள்ளன. நான்…அது எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜனங்கள் சுகவீனமாயும், மரித்துக் கொண்டுமிருக்கிறபடியால், அது எல்லா நேரங்களிலும் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கிறது. 35 அநேக சமயங்களில் நான் ஒரு இடத்திற்குச் சென்று அங்கே நின்று கொண்டிருப்பேன். அப்பொழுது யாரோ ஒருவர் வந்து, “சகோதரன் பிரான்ஹாமே, உமக்கு என்னைத் தெரியுமா?” என்று கேட்பார். “இல்லை, எனக்குத் தெரியாது” என்பேன். 36 அப்பொழுது அவர், “நான் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, மரித்துக் கொண்டிருந்தபோது நீர் வந்து எனக்காக ஜெபித்தீர். கர்த்தர் என்னைக் குணமாக்கினார்” என்பார். மேலும் இன்னொருவர், “நீர் என்னை வீதியில் சந்தித்தபோது நான் குருடனாயிருந்தேன், அந்த நாளிலே தரிசனம் உண்டானது,” என்பார். பார்த்தீர்களா? அது என்னவென்பதையே நான்—நான் ஒருபோதும் அறியேன். 37 ஆனால் சகோதரன் ஈகன் (Egan) அவர்களே, என்றோ ஒரு நாள் நான் என்னுடையக் கடைசி பிரசங்கத்தைப் பிரசங்கித்து விட்ட பிறகு, கர்த்தர் நான் ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிற கடைசி நபருக்கு ஜெபித்துவிட்ட பிறகு, நான் பரலோகம் செல்வேன் என்ற இந்த இன்ப நிறைவான சிந்தையைக் குறித்தே நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்த உயிர்த்தெழுதலின் காலையில், ஓ, அது என்னே ஒரு சந்தோஷமான நாளாயிருக்கும். நான் அங்கு நிற்கும்போது, தென் தேசத்து ராஜஸ்திரீ எழும்பும்போது, அவள் என்ன செல்வாக்குடையவளாயிருந்தாள் என்பதை என்னால் காணமுடியுமே! நான் அங்கே பில்லி கிரஹாம் எழும்பி வருவதையும், அவருக்கு இருந்த செல்வாக்கையும் காண்பேன். ஓரல் ராபர்ட்ஸ் இன்னும் மற்றவர்களும், சாங்கியும், பின்னியும், மூடியும், கால்வினும், நாக்ஸ் அவர்களும் மற்றவர்களும் வருவதைக் காண்பேன். அதன் பின்னர், நான் என்னுடைய குழு வருவதைக் காண்பேன். ஓ, அதுவே மகிழ்ச்சியாயிருக்கப் போகிறது. அதுவே என்னுடைய முடிசூட்டுதலாய் இருக்கப்போகிறது. அது உண்மை. தேவனுடையக் கிருபையினால் நான் அங்கே கோடான கோடிபேர் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் 38 இப்பொழுது நான் வெகு சீக்கிரத்தில் கடந்து செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். இப்பொழுது நான் அறிந்த மட்டில் சரியாக நம்முடைய சொந்தக் கூட்டங்களில் நான் அடுத்த படியாக கிறிஸ்துவுக்கு இலட்சக்கணக்கான ஆத்துமாக்களை ஆயத்தம் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் ஆயத்தம் செய்யப்படுவதை நான் காண்பேன் என்று நான்—நான் நம்புகிறேன். 39 இப்பொழுது ஞானஸ்நான ஆராதனையும் மற்றும் இப்பொழுது ஜனங்களை நேரில் சந்திக்க வேண்டியவைகளும், மற்ற காரியங்களும் உள்ளன. இப்பொழுது இது கூட்டத்திற்குப் பிறகு தொடர்ந்து நிகழும். 40 நீங்கள் எந்த நேரத்திலும் நேர்முக பேட்டிக்காக திரும்பி வருவீர்களேயானால் அல்லது அதுபோன்ற எதுவானாலும் நமக்காக இங்கு பணியாற்றும் சகோதரன் மெர்சியர் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் ஒருவிதமான ஒழுங்கு முறையை வைத்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் அதை செய்ய வேண்டும். நாம் அதை அறிவோம். சகோதரன் மெர்சியர், அவர் அவர்களை அமரச் செய்கிறார். அவர்கள் வருகின்றபொழுது, அவர் அவர்களை அழைத்து அமரச்செய்து, பின்னர் நான் என்னுடைய எல்லா நேர்முகப் பேட்டியாளர்களையும் சந்தித்து முடித்து விட்ட பிறகு நான் உள்ளே வந்து அவரை அழைத்து, “நான் அந்தக் குழுவினருடன் பேசி முடித்துவிட்டேன்” என்று அவரிடம் கூறுகிறேன். அப்பொழுது அவர் எனக்கு ஒரு புதிய குழுவினரை அனுப்பி வைக்கிறார். அதன் பின்னரே நான் அவர்களண்டை தொடர்பு கொண்டு உரையாடுகிறேன். நீங்கள் பாருங்கள். அதன் பிறகே அந்த அலுவலகப் பணிகள் அனைத்தும் முடிவடைகின்றன. நீங்கள் பாருங்கள், அவர் அவர்களை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பும்படி எப்படி அவர்களை அமர வைக்கவேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆகையால் இந்தச் சிறிய அலுவலகம் இந்த விதமாகச் செயல்படுவதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆகையால் அதனுடைய தொலைபேசி எண், பட்லர் (Butler) 2-1519 ஆக உள்ளது. [தொலைபேசி எண் மாற்றப்பட்டுள்ளது.—ஆசி.] அது…இல்லை, நீங்கள் ஜெபர்ஸன்வில்லுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்னை அழைப்பீர்களேயானால், அப்பொழுது அவர்கள் அந்த அலுவலகத்திலே பதில் கூறுவார்கள். உங்களுக்கு மிகுந்த தயவான நன்றி. 41 இப்பொழுது நாம் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையைத் திறப்பதற்கு சற்று முன்னர்…இந்த ஆராதனை முடிவுற்றவுடனே ஞானஸ்நான ஆராதனை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். பில்லி இன்றிரவிற்கான ஜெப அட்டைகளைக் கொடுக்கும்படி இங்கிருப்பான். 42 இப்பொழுது இன்றிரவு சபையில் இருக்கின்ற நகர மக்கள் பெரும்பாலும் ஞாயிறு இரவென்று லூயிவில் மற்றும் வெளியே சுற்றிலுமுள்ள இடங்களில் உள்ள தங்களுடைய சபைகளில் இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த சபைகளில் இருப்பார்கள். ஆனால் அது பெரும்பாலும் வெளிப்புறங்களிலிருந்து வந்தவர்களாகவே இருக்கும். ஆகையால், நாம் அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கும்படியாக ஒரு பெரிய ஜெப வரிசையை இன்றிரவு ஒருக்கால் அமைக்கலாம் என்று நான் கருதுகிறேன். நாம் அதைச் செய்வோம் என்றே நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நாம் ஒரு சில ஜெப அட்டைகளை வெளியே கொடுத்திருக்கிறோம். 43 கடந்த இரவு, கடந்த இரவிற்குப் பின்னர் என்று நான்—நான் நினைக்கிறேன். ஓ, நான் அந்தத் தனியான ஆகாய விமானங்கள் ஒன்றில் ஏறிச் செல்லப்போவதாயிருந்தது போன்ற உணர்வைப் பெற்றேன். நாம் அதைக் குறித்துப் பேசினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மீண்டும் இந்தச் சிறிய பழைய கூடாரத்தில் கரங்கள் உயர்த்தப்பட்டதைக் காண்பது அருமையாயிருக்கிறது. 44 எனக்கு இங்கு ஒரு சிறு பையன் உண்டு. அந்தப் பையன்தான் குட்டி ஜோசப்பாகும். அவனுக்கு ஏறக்குறைய மூன்று வயதாகிறது. அவர்கள் எல்லோரும் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது, அவன் அங்கிருந்த அந்தக் கூடார பிரகாரத்தின் மத்தியில் குதிக்கவில்லையென்றாலும், அவனுடைய கரங்களை உயர்த்தி, சத்தமிடத் துவங்கி, அங்கிருந்த அந்தப் பிரகாரத்தின் மத்தியில் கர்த்தரைத் துதித்தான். ஆனால் இந்தக் காலையில்தான் என்று நான் நினைக்கிறேன். அவன் தன்னுடைய சிறிய சகோதரியின் கரத்தைக் கடித்துவிட்டான். எனவே நான் அவன் அந்த விதமாக நடந்து கொள்ளும் வரையில் அவனுடைய சத்தமிடுதல் எவ்வித நன்மையையும் செய்யாது என்று அவனிடம் கூறினேன். [சகோதரன் பிரான்ஹாமும் சபையோரும் சிரிக்கின்றனர்.—ஆசி.] ஓ, என்னே! அந்தச் சிறு நபர்கள், அவர்களால் உண்மையிலேயே உங்களைப் போலச் செய்ய முடியும். அவர்களால் செய்ய முடியாதா? நல்லது, உண்மையாகவே அது என்னவாயிருந்தது? அவன் மற்றவர்கள் அதைச் செய்கிறதைக் கண்டு தானும் அதைத்தான் செய்ய வேண்டும் என்று எண்ணி, நாம் செய்து கொண்டிருந்த விதமாகவே நம்மைப் பின்பற்றினான். 45 இப்பொழுது நாம் இங்கே அவருடைய வர்த்தையைத் திறந்து வைத்துள்ளோம். இப்பொழுது நாம் அப்படியே அதைக் குறித்து அவரிடத்தில் பேசுவோமாக. இப்பொழுது வெறுமனே ஒரு… 46 அன்புள்ள தேவனே, நாங்கள் இப்பொழுது உம்மண்டை பயபக்தியோடும், அமைதியோடும், தெளிவோடும் வரும்போது, நீர் ஜெபத்திற்குச் செவிகொடுத்து பதிலளிப்பீர் என்று விசுவாசத்தில் நம்பிக்கையாயிருக்கிறோம். ஏனென்றால், “நீங்கள் என் நாமத்தில் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும் நான் அதைச் செய்வேன்” என்று வாக்களித்த, தவறிப்போகாதவராயிருக்கிற, எல்லாவற்றிற்கும் போதுமான உம்முடைய குமாரனுடைய நாமமாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகிறோம், நாங்கள் அவருடைய நாமத்தில் வருகின்றபடியால் நாங்கள் வேண்டிக்கொள்வதெதுவோ அதை நாங்கள் பெற்றுக் கொள்வோம் என்பதை நாங்கள் அறிவோம். ஏனென்றால் மகத்தான, வல்லமையான யேகோவா தேவனே நாங்கள் உம்மை அணுகும்படி வேறே எந்த நாமமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் எதற்கும் தகுதியானவர்கள் என்று கூறாமல், அவருடைய கிருபையில் வருகிறோம். ஏனென்றால் அவர் எங்களுக்காக மரித்தார் என்பதில் அவர் எங்களுக்காக ஒரு கிருபாதாரப் பலியை உண்டுபண்ணியிருக்கிறார். அவரே எங்களுடைய பாவங்களுக்காகப் பரிகாரம் செய்தார். அவருடைய மரணத்தின் மூலமாக நாங்கள் உம்முடைய பார்வையில் நீதிமான்களாக்கப்பட்டவர்களாய் நிற்கமுடியும் என்று நாங்கள் உணருகிறோம். அதுவே எங்களுடைய விசுவாசமாயிருக்கிறது. பொல்லாங்கான எதையும் நாங்கள் வேண்டிக் கொள்ளாமல் எங்கள் ஒவ்வொருவருக்கும் நன்மையானதையே வேண்டிக் கொள்கிறோம். 47 ஆகையால் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய வார்த்தையினூடாக எங்களிடத்தில் பேசும். பையன்களும், பெண்களுமாகிய நாங்கள் எப்படி மேலான புருஷர்களாயும், மேலான ஸ்திரீகளாயும் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளும்படியான அந்தச் சத்தத்தில் எங்களிடத்தில் பேசும். மரணத்திற்கு அப்பாலே பெரிய வாசல் உண்டென்றும், ஒவ்வொரு முறையும் எங்களுடய இருதயம் துடிக்கும்போது, நாங்கள் யாவரும் போகவுள்ள அந்த வாசலண்டை இன்னும் ஒரு துடிப்பிற்கு நெருக்கமாக நெருங்குகிறோம் என்பதை அறிந்துள்ளோம். நாங்கள் அங்குச் சென்ற பின்னர், மீண்டும் ஒப்புரவாகுதலை உண்டுபண்ணும்படியான எந்த ஒரு தருணமும் மீண்டும் இல்லை என்பதையும் அறிந்துள்ளோம். நாங்கள் இப்பொழுது பெற்றுள்ள இந்தச் சந்தர்ப்பத்தை இனி ஒருபோதும் நாங்கள் பெற்றுக்கொள்ளமாட்டோம். நாங்கள் எப்போது அக்கரையைக் கடப்போம் என்பதை அறியாதவர்களாயிருக்கையில், ஓ, தேவனே, நாங்கள் உம்மை எப்படி அணுகவேண்டும் என்பதையும், உமக்கு முன்பாக எங்கள் காரியத்திற்கு எப்படி மன்றாட வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளும்படி தீவிரமாய் எங்களண்டை வந்து நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய உணர்வுகளை எங்களுக்குக் கொண்டுவரும்படியாக இரக்கத்திற்காக வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே இதை அருளும். 48 நாங்கள் தேவையுள்ள ஜனங்களாய் இருக்கிறோம். நாங்கள் ஆடுகளாயிருக்கின்றபடியால், மரண நிழலின் பள்ளத்தாக்கினூடாகவும், ஜீவனூடாகவும் எங்களை வழிநடத்தும் மேய்ப்பனைக் கூவியழைக்கின்றோம். பண்டைய தாவீது கூறினபோது, “நான் அந்த ஸ்தலத்திற்கு வரும்போது பயப்படேன்” என்றான். ஏனென்றால் மேய்ப்பனானவர் எங்களுடைய பாதம் அந்த மகிமையானக் கரையின் மேல் திடமாய் இளைப்பாறும் வரையிலான அந்த ஸ்தலத்தினூடாக என்னை வழிநடத்துவார். அங்கே வயோதிபமும், வியாதியும், துக்கமும், மரணமும் எங்களை விட்டு அகன்றுவிடும். நாங்கள் அங்கே என்றென்றைக்குமாய் சுயாதீனமாயிருப்போம். 49 பேசும் கர்த்தாவே, பிரகாசமான கண்களைக் கொண்ட யாரோ ஒருவருடைய இந்தச் செல்லப்பிள்ளை இங்கே எனக்கு முன்பாக இந்தச் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். இன்றைக்கு என்னுடைய கண்களினால் அவளைப் பார்க்காதிருக்க முடியவில்லை. இந்த இளம்பிள்ளை வாதத்தினால் முழுவதும் முடக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு என்ன ஒரு பொல்லாங்கு சம்பவித்துள்ளது. ஓ, தேவனே, அந்தச் சிறு செல்லப்பிள்ளைக்கு விடுதலையைக் கொண்டுவாரும். அதை அருளும் கர்த்தாவே. அவளுக்கு மாத்திரமல்ல, இங்கே காத்திருக்கின்ற மற்றவர்களுக்கும் விடுதலையைக் கொண்டு வாரும். இந்தக் காலையில் உம்முடைய பரிசுத்த ஆவியானது அவர்களை மிகவும் உயரத்தில் உயர்த்துவாராக. அதாவது அவர்களுடையச் சந்தேகத்தின் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு பாவத்தடையையும் கடந்துச் செல்வார்களாக. உம்முடைய பரிசுத்த ஆவியானது அவர்கள் மேல் அசைவாடி அவர்களை சொஸ்தமாக்குவதாக. கர்த்தாவே இந்தக் காரியங்களை அருளும். ஏனென்றால் நாங்கள் இந்த ஆசீர்வாதங்களை உம்முடைய மகிமைக்காக குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 50 இப்பொழுது, நான் இந்தக் காலையில் ஒரு பாடப் பொருளாக இதைத் தேர்ந்தெடுக்கிறேன். சிறுபிள்ளைகளாகிய நீங்கள் பெரியவர்களோடு முழு நேரத்தையும் எடுத்துக் கொள்ள வருவதற்காக என்னை மன்னியுங்கள். இந்தக் காலையில் இருக்க வேண்டிய உங்களுடைய ஞாயிறு பாட வகுப்பு இங்கில்லை. ஆனால் நான் என்ன படிக்க விரும்புகிறேன் என்பதை நீங்கள் கூட கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இந்தக் காலையில் சாமுவேலின் முதலாம் புஸ்தகம் 3ம் அதிகாரத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். 51 அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள் என்பதையே நான் ஒரு பாடப்பொருளாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். அது சிறு பெண்பிள்ளைகளுக்கும், பெரிய பெண் பிள்ளைகளுக்கும், சிறு பையன்களுக்கும், பெரிய பையன்களுக்கும் எல்லோருக்குமே உதவியாயிருக்கும். பாடப்பொருள்: அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 52 இப்பொழுது நீங்கள் வேதாகமத்தில் சாமுவேலின் முதலாம் புஸ்தகம் 3-ம் அதிகாரத்திற்குத் திருப்பிக் கொண்டிருக்கையில், இதில் உள்ள முதல் பத்து வசனங்களை இவ்விதமாக வாசிக்கிறேன். சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. 53 ஓ, நான் எப்படியாய் ஒரு நிமிடம், ஒருக்கால் சற்று நேரம் அங்கேயே தரித்திருக்க விரும்புகிறேன். அது எனக்கு புதியதாக தென்படுகிறது. எனவே நான் அந்த வசனத்தை மீண்டும் ஒருமுறை அப்படியே வாசிக்கட்டும். சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. 54 அப்படியானால், பாருங்கள், ஒரு தரிசனம் என்னவாயிருக்கிறது? அது கர்த்தருடைய நேரடியான வார்த்தையாயிருக்கிறது. புரிகின்றதா? கர்த்தருடைய வார்த்தை அபூர்வமாயிருந்தது. ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்; இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, ஏலியினிடத்தில் ஓடி, இதோ இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப் படுத்துக்கொண்டான். மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்; இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்; என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப் போய்ப் படுத்துக்கொள் என்றான். சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான். கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை; சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, சாமுவேலை நோக்கி; நீ போய்ப் படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான். சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். அப்பொழுது கர்த்தர் வந்து நின்று முன்போல; சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். 55 தேவனுடைய சத்தமாயிற்றே! அந்நாளில் அவருடைய சத்தத்தைக் கேட்பது ஒரு அபூர்வமானக் காரியமாயிருந்தது. பாருங்கள், பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. உண்மையான தேவனுடைய சத்தம் என்பதே ஒரு அபூர்வமான காரியமாயிருந்தது. ஏனென்றால் ஜனங்கள் வழிவிலகிப் போயிருந்தனர். அவர்கள் அந்நாளில் ஒரு சபையை உடையவர்களாயிருந்தனர். ஆனால் அதுவோ கர்த்தருடைய கட்டளைகளை பின்பற்றவில்லை. அவர்கள் ஏலி என்னும் பெயர்கொண்ட ஒரு—ஒரு ஊழியக்காரனை உடையவர்களாயிருந்தனர். ஜனங்கள் எதை விசுவாசிக்க விரும்பினார்களோ, அதைக் குறித்த கட்டளைகளை உபதேசிப்பதன் மூலம் அவன் தேவனை விட்டு தூரமாய் விலகியிருந்தான். அது இந்நாளுக்கு அப்படியே இணையாயில்லையா?. அவன் அதை அப்படியே ஜனங்களுக்கு கட்டளையிட்டான். அவன்—அவன் தன்னுடைய தெரிந்து கொள்ளுதலையே தெரிந்து கொண்டான். அவன் பலியிலிருந்து மூன்று கூறுள்ள ஆயுதங்களைக் கொண்டு இறைச்சியின் மிக நல்ல பாகத்தை எடுத்துக் கொள்ளும் குமாரரை உடையவனாயிருந்தான். அது பிரதான காரியமாயிருந்த பலிசெலுத்துதலுக்குரிய ஸ்தலமாக மாறினது. சாமுவேல் கர்த்தருடைய கட்டளைகளைக் கையாண்ட விதத்தைக் குறித்து கவலையற்றவனாயிருந்தான். உண்மையான தேவனுடைய வார்த்தையோ அபூர்வமான ஒரு காரியமாயிருந்தது. 56 அது இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. நாம் சபைக்குச் செல்கிறோம், மற்றும் நாம் ஜனங்கள் செல்கிறதையும், துரிதமாக செயல்பட்டு, “நாங்கள் இந்த வருடம் அதிக அங்கத்தினர்களைக் கொண்டு எங்களுடைய ஸ்தாபனத்தை உருவாக்க விரும்புகிறோம். மற்றச் சபையிலிருந்து உங்களுடைய கடிதங்களைக் கொண்டு வந்து எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறுவதை நாம் கண்டறிகிறோம். “பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களைத் திரட்டுவோம்” என்பது போன்ற கவர்ச்சி வாசகங்கள். எல்லாமே அதைப்போன்று செய்து கொண்டு கூக்குரலிட்டுக்கொண்டு, அடுத்துள்ள ஸ்தாபனத்தைக் காட்டிலும் அதிக வளர்ச்சி செய்வதினால் நாம் வேதாகமத்தின் கொள்கைகளைக் கைவிட்டு விட்டோம். நாம் வழிவிலகி, வித்தியாசமான காரியங்களைப் போதிக்கத் துவங்கிவிட்டோம். 57 இந்நாட்களைக் குறித்து தீர்க்கதரிசி கூறினபோது, “அவர்கள் தேவனுடைய உபதேசபத்தைப் போதியாமல் மனுஷருடைய உபதேசத்தையே போதிப்பார்கள்” என்றார். 58 நாம் அதைக் குறித்து மிக ஏராளமானவற்றைப் பார்த்திருக்கிறோம். அது நீண்ட காலமாகவே மறக்கப்பட்டு விட்டது. இன்றைக்கு யாரோ ஒருவர் வந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறும்படிக்கு, கர்த்தருடைய வார்த்தை ஒரு அபூர்வமான காரியமாயிருக்கிறது. இப்பொழுது நாம் அதைக் குறித்து போலியாக பாவனை செய்யும் அநேகரைப் பெற்றிருக்கிறோம். சாத்தான் உண்மையிலேயே அந்த வேலையில் தான் இருக்கிறான். ஜனங்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்னர் அது கர்த்தருடைய வார்த்தையாயிருந்தாலொழிய அதைக் கூற பயப்பட்டனர். ஆனால் இன்றைக்குக் கர்த்தருடையச் சத்தத்தைக் கேட்பதும், “கர்த்தர் என்னிடம் பேசினார்” என்று கூறக்கூடிய ஒரு நபரைக் கண்டறிவதும் அபூர்வமான ஒரு காரியமாயிருக்கிறது. ஜனங்களுக்கு மத்தியில் அவர்கள், “கர்த்தர் என்னிடம் பேசினார்” என்று கூறும்போது ஜனங்கள் அதற்குச் செவி கொடுக்காத நேரமாக இருக்கிறது என்பதை நீங்கள் கவனியுங்கள். 59 புருஷர்களும், ஸ்திரீகளும் வழக்கமாக முழு இரவும் ஜெபித்து தங்களுடைய வீடுகளைக் கர்த்தருடையப் புத்தகத்தின் மூலம் ஒழுங்கில் வைத்திருந்தபோது, தேவனே அவர்களுடைய வீடுகளில் முதன்மையானவராயிருந்தார். 60 பாருங்கள், நாம் கர்த்தருடையக் காரியத்தைப் பார்க்கிலும் வேறே அநேகக் காரியங்களையே மிக அதிகமாக பெற்றிருக்கிறோம். உங்களால் ஜெபக்கூட்டத்தை நடத்த முடியாது, ஏனென்றால் திரு.காட்பீரே (Godfrey) என்பவனின் நிகழ்ச்சி இன்றிரவு உள்ளது. உங்களால் ஜெபக்கூட்டத்தை நடத்த முடியாது. ஏனென்றால் இன்றிரவு நாங்கள் சூசியை நேசிக்கிறோம் என்ற நிகழ்ச்சி உள்ளது. இல்லையென்றால் அதைப் போன்ற ஏதோ ஒருவிதமான ஒரு மூடத்தனமான அர்த்தமற்றக் காரியங்களே நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க நமக்கு நேரமிருப்பதில்லை. கிறிஸ்தவர்களாய் இருப்பதாக உரிமைக் கோருகிறவர்கள் வீட்டில் முழங்காற்படியிட்டு, இந்தவிதமான ஒரு சிறு ஜெபத்தை, அதாவது, “கர்த்தாவே என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதியும், எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். இரவு வணக்கம்” என்று ஏறெடுக்கிறார்கள். பின்னர் அடுத்த நாள் காலையில் எழுந்து, “இந்நாள் முழுக்க எங்களை வழிநடத்தும், நல்ல நாள்” என்கிறார்கள். 61 நாம் கர்த்தர் பேரில் காத்திருக்க வேண்டும். நீங்கள் பாருங்கள், நாமே எல்லாவற்றையும் பேசுகிறோம். ஆனால் அவர் நம்மிடத்தில் திரும்பப் பேசும்படி நாம் அவருக்குத் தருணம் அளிக்கிறதில்லை. அதாவது நாம் ஜெபிப்போமேயானால், நம்முடைய ஆத்துமாவானது தேவனுடைய சமூகத்திற்குள் வருகிற வரையில் ஜெபித்து, பின்னர் சற்று இளைப்பாறி, அவருடைய சத்தத்திற்குச் செவி கொடுப்போமாக. 62 ஆனால் இன்றைக்கு அநேக சத்தங்கள் உள்ளன. அவைகளே நம்மை கர்த்தருடைய சத்தத்திலிருந்து தூர கொண்டு செல்கின்றன. சுகபோகத்தின் சத்தம் என்று ஒன்று உண்டு. எனவே அநேக ஜனங்கள் அதற்குச் செவி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை நாடிச்சென்று, அதில் நேரத்தைச் செலவழித்து அனுபவித்து மகிழ்கின்றனர். அவர்களில் அநேகர் கிறிஸ்தவர்கள் என்று உரிமை கொண்டாடுகின்றனர். ஏதோ ஒருவிதமான பண்டைய நடனமான குலுங்கி குதித்து சுழன்று ஆடும் நடனம் (Rock and Roll) நிகழும்போது, அவர்களால் தேவபக்தியானவற்றிற்குச் செவிகொடுக்க முடியவில்லை. அவர்கள், “நல்லது, நான் ஒரு கிறிஸ்தவன், நான் இன்றைக்கு ஒரு வசனத்தை வேதாகமத்தில் வாசிக்க வேண்டும். ஆம், இயேசு கண்ணீர் விட்டார்” என்கிறார்கள். அதுதான் அது. தொடர்ந்து இருக்கிற வண்ணமாக செயல்படுகிறார்கள். ஆனால் அதன் பின்னர் அவர்கள் முழங்காற்படியிட்டு ஜெபித்துவிட்டு, அதன்பின்பு அவர்கள் அநேகக் காரியங்களை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். உலகத்தில் அநேக சத்தங்கள் உள்ளன. எனவே தேவனிடத்திலிருந்து நம்முடைய கவனத்தை வசீகரிக்க அநேக காரியங்கள் இருக்கின்றன. 63 நேற்றைய தினம் நானும் என் மனைவியும் சில மளிகைச் சாமான்களை வாங்கப் பல்பொருள் அங்காடிக்கு செல்ல வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் எனக்கு நேர்முகப் பேட்டிக்கான சந்திப்பு நேரங்களுக்கும் இன்னும் மற்றக் காரியங்களுக்கும் நேரமாகிவிட்டிருந்தபடியால் மிக துரிதமாக விரைந்து சென்றேன். அங்கு ஒரு சிறு பையன் பாதி தூக்கத்தில் ஒரு சிறு பெண்ணோடு அதாவது யாரோ ஒரு மனிதனுக்குச் சொந்தமான ஏதோ ஒரு சிறு குட்டைக் கால்சட்டையை அணிந்து அங்கு வந்திருந்தவளோடு நின்று கொண்டிருந்தான். காற்சட்டைகள் மனிதனுக்காக தயாரிக்கப்பட்டபடியால் அவர்கள் அவைகளை அணிய வேண்டியவர்களாயிருந்தனர். 64 வேதமோ, “ஒரு ஸ்திரீ அதை அணிவது தேவனுடைய பார்வையில் அருவருப்பாயிருக்கிறது” என்று கூறுகிறது. 65 அவளுடைய உதட்டில் அதிகமாய் உதட்டுச் சாயம் பூசிக்கொண்டிருக்க, அவளுடைய கண்களோ கிட்டத்தட்ட பாதி மயக்கத்தில் இருக்க, அவள் அந்தச் சிறு பையனிடத்தில், “இன்னின்னது—இன்னின்னது எங்கே?” என்று கேட்டாள். அதற்கு அவனோ, “எனக்குத் தெரியும் என்று எப்படி நீ எதிர்ப்பார்க்கிறாய்?” என்று கேட்டான். 66 அப்பொழுது அவள், “நான் இந்தக் காலை ஆறு மணி வரையில் உள்ளே போகவேயில்லை என்பதை நீ ஞாபகம் வைத்துக்கொள்” என்றாள். அவள் பன்னிரண்டு வயதுகூட நிரம்பாதவளாயிருந்தாள். 67 இப்பொழுது இயேசுவானவர் பன்னிரண்டு வயதிலேயே நம்முடைய மாதிரியாயிருந்து, “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா?” என்றார். 68 இன்றைக்குத் தேவனுடைய சத்தம் ஒரு அபூர்வமான காரியமாய் இருப்பதில் வியப்பொன்றுமில்லையே. அது பல்வேறுபட்ட அநேக சத்தங்களால் அடக்கி அழிக்கப்படுகிறது. அநேகக் காரியங்கள் அதை மங்கச் செய்து எடுத்துப் போடுகின்றன. அது நம்முடைய உணர்வுகளை மந்தமாக்குமளவிற்கு, நாம் தேவனுடைய சத்தத்தைக் கேட்கமுடியாதபடிக்குச் செய்யும் ஒரு ஸ்தானத்தை வந்தடைந்துள்ளது. நாம் நம்முடைய உணர்வுகளை உதறித்தள்ளிவிட வேண்டியவர்களாயிருக்கிறோம். நீங்கள் புருஷர்களும், ஸ்திரீகளுமாயிருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் தேவனுடைய சிருஷ்டிப்பாய் இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் அவரைச் சேவிக்கும்படிக்கே இங்கே வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஆனால் சாத்தானுடைய சத்தமும், கள்ளத்தீர்க்கதரிசிகளுடைய சத்தமும், “ஓ, நவநாகரீகமாயிருங்கள்” என்கிறதே! 69 ஒரு சில தினங்களுக்கு முன்னர் நான் பேசிக் கொண்டிருந்தேன். அதாவது நான் சபைக்கு வந்து கொண்டிருந்தபோது, நான் என்னுடைய வானொலியைத் திருப்பினேன். அப்பொழுது நான் லூயிவில்லிலிருந்து ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியைக் கேட்டேன். அதில் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குச் சபைகளில் மிதமாக குடிப்பதைக் குறித்து போதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. அவர்கள் மிதமிஞ்சி போய்விடாதபடிக்கு அவர்களைத் தற்காலத்தவர்களாக்குகின்றனர். 70 ஓ, அவர்கள் கிறிஸ்துவையே இவர்களுக்குப் போதிக்க வேண்டுமேயன்றி, குடிப்பதையல்ல, அது எந்த வீட்டையுமே உடைத்து, அழித்து ஆக்கினைக்குள்ளாக்கிவிடும், மதுபானத்தால் வெறிகொண்டு, பாதி மயக்கத்தில் எப்போதும் மூழ்கி, தங்களுடையச் சிந்தைகள் புகைப்பிடிப்பதினாலும், குடிப்பதினாலும் செயலற்றுப் போயிருக்க, முழு இரவும் வெறிகொண்டு களியாட்டம் போடும் ஒரு குடும்பத்தினருக்கு மத்தியில் எப்படித் தேவனுடைய சத்தம் பேச முடியும்? 71 தேவனுக்காகக் காத்திருக்கிற மனிதர்களே அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக வருகின்றனர். தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக வருவது என்பது பனித்துளிகளும், அழகிய மஞ்சள் நிற மலர்களையுடையக் கொடிகளும் இனிமையாய்க் காணப்படும் ஓர் அதிகாலையில் வெளியே செல்வது போன்றிருக்கும். அதைப் போன்று ஒரு நபரின் பிரசன்னத்திற்குள்ளாக நீங்கள் வருகின்ற போது, அவர்கள் தேவனோடிருந்து வருகின்றனர் என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். 72 இந்தக் காலை வந்து கொண்டிருக்கையில் என்னுடைய மனைவி என்னிடம் கூறினாள். அவள், “பில்லி, நான் எவரை யாவது புகழ்ந்து கூறவேண்டும் என்ற வகையில் இதைப் பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால்,” என்று கூறி, அவள் தொடர்ந்து, “கடந்த இரவு அல்லது ஏதோ ஒரு இரவு என்று நான் நினைக்கிறேன், அப்பொழுது நான் ஏமிஷ் வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறு பெண்ணின் அருகில் அமர்ந்திருந்தேன். அந்தச் சிறு பெண்மணி ஒரு சிறு தொப்பியைத் தலையில் அணிந்திருந்தாள்” என்று கூறினாள். மேலும் அவள், “அந்த ஸ்திரீ இயேசுவோடிருந்து வந்திருந்தாள் என்று உங்களால் கூறமுடியும். ஏனென்றால் அவள் இனிமையாய்க் காணப்பட்டாள். அவளுடைய ஆத்துமா கனிவார்ந்ததாயிருந்தது. அவளுடைய கண்கள் தெளிவாயிருந்தன” என்றாள். அங்குப் பாவமோ அல்லது பின்னாக மறைந்து கொள்ளும்படியான எந்தக் காரியமும் இல்லாதிருந்தது. அவள் தேவனுடைய பிரசன்னத்தில் இருந்திருந்தாள். மதுபானத்தினாலோ, புகையிலையினாலோ, எல்லா விதமான உலகக் காரியங்களினாலோ அவளுடைய உணர்வுகள் மந்தமடையாமலிருந்தன. அவள் தேவனுடையப் பிரசன்னத்திலிருந்து புத்துணர்ச்சியடைந்து தன்னுடைய வேதாகமத்தைப் படித்து, தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து கொண்டிருந்தாள். 73 ஆனால் நவீன அமெரிக்கர்களாகிய நாம் என்ன செய்கிறோம்? பிரசங்கபீடத்திற்குப் பின்னால் உள்ள கள்ளத் தீர்க்கதரிகளோ அதெல்லாம் சரியென்று கூறுகிறார்கள். நான் ஒருவிதமான எண்ணங்கொண்டவனாய் இதைக் கூறுகிறேன். நான் தவறாயிருந்தால் தேவன் என்னை மன்னிப்பாராக. அவர்களில் அநேகர் தேவனை அறியாதிருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக்கொண்டுள்ளேன். சபையானது அதனுடைய போதகரைக் காட்டிலும் சற்றேனும் வளர்ச்சியடையவேயில்லை. எனவே வேதமோ, “இந்த மேய்ப்பர்கள், இவர்கள் எப்படியாய் மந்தையைச் சிதறடித்துள்ளனர்! இவர்களுக்கு ஐயோ! அவர்கள் கனிகொடாத கொடியாயிருக்கிறபடியால் பிடுங்கி எறியப்பட்டு, சுட்டெரிக்கப்படுவார்கள்” என்று கூறுகிறதில் வியப்பொன்றுமில்லையே. 74 இன்றைக்கு ஜனங்களின் உணர்வுகளை மந்தமாக்கும்படி அநேக காரியங்கள் உள்ளனவே! ஓ! ஆனால் அவை எல்லாவற்றிற்கும் மத்தியிலும், மந்தமான ஒவ்வொன்றும் இருந்தும் கூட, இன்றைக்கு உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு சத்தத்தின் மத்தியிலும், அவர்களில் சிலர் சுகபோகச் சத்தங்களை உடையவர்களாயிருக்கின்றனர். அவர்களில் சிலர் ஜனங்களை கவர்ச்சிக்கும்படியான பாவமுள்ளச் சத்தங்களை உடையவர்களாயிருக்கின்றனர். ஆனால் அவை ஒவ்வொன்றும் இருந்தும்கூட, “என் சத்தத்தைக் கேட்டு என்னைப் பின்பற்றி வருகிறவன்” என்ற தேவனுடைய சத்தியம் இன்னமும் மாறாததாயிருக்கிறதே! தேவனுடைய சத்தத்தைக் கேட்கும் புருஷர்களிடத்திலும், ஸ்திரீகளிடத்திலும், தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்படி தங்களுடைய செவிகளைத் திறக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நபரிடமும் தேவன் பேசும்படி இன்னமும் காத்திருக்கிறார். 75 ஒரு மனிதன், அவர் ஒரு போதகராயிருப்பாரானால்…அநேக சமயங்களில் ஜனங்கள், “உங்களால் இதைச் செய்ய முடியவில்லையா? உங்களால் இங்கு விரைந்து வரமுடியவில்லையா? உங்களால் இதைச் செய்யமுடியவில்லையா?” என்கிறார்கள். ஓ, நான் அதைச் செய்ய விரும்புகிறேன்: ஆனால் நான் அதைச் சரியாகச் செய்யப்போவதாயிருந்தால், நான் தேவனுடைய பிரசன்னத்தில் தரித்திருக்க வேண்டும். அப்பொழுது ஜனங்கள், “ஓ, சகோதரன் பிரான்ஹாம் யாருடனும் சம்பந்தங்கலவாத ஒருவர்” என்கின்றனர். அதுவல்ல அது. நான் ஜனங்களை நேசிக்கிறேன். ஆனால் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் அவ்வாறிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குக் கூறும்படி அவர் என்னிடத்தில் என்ன கூறவிருக்கிறார் என்பதைக் கண்டறியும்படி நான் அவரோடு தரித்திருக்க வேண்டும். எங்கோ சற்று செவிகொடுங்கள், அவர் உங்களுக்காக ஏதோ ஒரு காரியத்தை உடையவராயிருப்பார். எனவே நீங்கள் அதைக் குறித்து அறிந்து கொள்ளும்படிக்கு அவர் விரும்புகிறார். 76 போதகரே, நீங்கள் பிரசன்னத்தில் தரித்திருந்து, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பதைக் காட்டிலும் ஒருபோதும் வேறு ஏதோ காரியத்தில் மிகவும் மும்முரமாயிருக்காதீர்கள். தேவன் எப்பொழுதுமே தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறார். அது எவ்வளவு மோசமான நேரங்களாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுடைய சபை அதற்கு எதிராக எவ்வளவுதான் போதித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இயேசு கிறிஸ்துவோ, அவருக்கு செவி கொடுக்கும் எவரிடமும் அமர்ந்த மெல்லியச் சத்தத்தில் பேச இன்னமும் சித்தமுடையவராயிருக்கிறார். நாம் அப்படியே நம்மை அமைதிப்படுத்திக் கொள்வோமேயானால், அவர் அதைச் செய்ய இன்னமும் ஆயத்தமாகவே உள்ளார். 77 ஆனால் நாமோ ஓடி, குழப்பமடைந்து, “போதகரே, நான் இந்தச் சபையில் சேர்ந்துகொள்ள முடியுமா?” என்று கேட்கிறோம். “எந்தச் சபையிலிருந்து நீர் வருகிறீர்?” “இன்னார்—இன்னார்”. “நல்லது, உங்களுடைய கடிதத்தை எங்களிடம் கொண்டு வாருங்கள்.” ஓ, என்னே! “நான் இந்தச் சபையில் சேர்ந்துகொள்ள முடியுமா?” 78 “ஓ, ஆம், வாருங்கள், நாங்கள் உங்களைச் சற்று தண்ணீரால் தெளித்து, உங்களுடையப் பெயரைப் புத்தகத்தில் எழுதுவோம். அப்பொழுது நீங்கள் ஐக்கியத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வீர்கள்”. 79 நல்லது, அதைப் பார்க்கிலும் மோசானிக் லாட்ஜ் என்ற இடத்தில் கூடும் சர்வதேச ஸ்தாபன கூடுகையே மேலான ஒழுங்கை வைத்துள்ளது. அது உண்மை. மோசானிக் லாட்ஜ் என்ற கூடுகை ஸ்தலம் மற்றும் மற்ற எல்லாக் கூடுகை ஸ்தலங்களும் சரியாயிருக்கின்றன. ஆனால் அது இன்னமும் தேவனுடைய வீடாயிருக்கவில்லையே. அங்கேதான் தேவனுடைய வீட்டில்தான் தேவன் பேசுகிறார். அந்தக் கூடுகை ஸ்தலங்கள் உங்களை அறநெறிக்குட்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால் தேவனோ உங்களைத் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவினூடாக நீதிமான்களாக்குகிறார். இப்பொழுது அதற்கு ஒரு நீதிநூல் சட்டத்தொகுப்பு உண்டு; ஆனால் தேவனோ உங்களுக்கு ஒரு புதியப் பிறப்பை வைத்திருக்கிறார். 80 ஆனால் அவருடைய அமர்ந்த மெல்லிய சத்தத்திற்குச் செவிகொடுங்கள். கிறிஸ்தவர்களாயிருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிற நீங்கள் ஒவ்வொருவரும் அவருக்கு முன்பாக உங்களை அமைதியாக்கிக் கொள்ளுங்கள். துவைத்தல் அதற்கு இடையூறாக இருக்க அனுமதிக்க வேண்டாம். வேலை அதற்கு இடையூறாக இருக்க அனுமதிக்க வேண்டாம். எதுவுமே அதற்கு இடையூறாக இருக்க அனுமதிக்க வேண்டாம். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளும்படி எவரையும் அனுமதிக்க வேண்டாம். அப்படியே அவருக்கு முன் செல்லுங்கள். எங்காவது காடுகளுக்குள் எழும்பிச் செல்லுங்கள். சாலையின் பக்கவாட்டில் செல்லுங்கள். அந்தரங்க அறைக்குள்ளாகச் சென்று கதவைத் தாழிட்டுக் கொள்ளுங்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது, உங்களுடைய முழங்காலில் தரித்திருங்கள். நீங்கள் எல்லாவிதமான சத்தங்களையும் எங்கும் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அப்படியே கீழே அமர்ந்து அந்தச் சத்தங்கள் யாவும் அமைதியாக்கப்படுகின்ற வரையிலும் அங்கேயே தரித்திருங்கள். அப்பொழுது நீங்கள் உயரத் துவங்குவீர்கள். அது உங்களை மாற்றும். அது இந்தக் குட்டி சாமுவேலை வித்தியாசமுள்ளவனாக மாற்றினதுபோல, உங்களையும் வித்தியாசமுள்ளவர்களாக்கும். நீங்கள் இதைச் செய்வீர்களேயானால் அது உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்யும். இப்பொழுது அது நீங்கள் என்னவாயிருக்க வேண்டுமோ, அந்நிலைக்கு உங்களையே உருவாக்கும். அது நீங்கள் எந்தவிதமான கிறிஸ்தவனாயிருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கும். 81 நாம் இப்பொழுது இந்த நவீன நாளிலிருந்து கடந்து சென்ற ஒரு நாளுக்குத் திரும்பிச் செல்வோமாக. நாம் பூர்வகால நாட்களுக்கு திரும்பிச் செல்வோமாக. இந்தத் தேவனுடைய சத்தம் எல்லா காலங்களிலும், எல்லா வாழ்க்கை முறைகளிலும் உள்ள மனிதர்களிடத்திலும் வந்திருக்கிறது. நீங்கள் ஒரு விவசாயியாயிருந்தாலும், நீங்கள் ஒரு செருப்பு செப்பனிடுபவராக இருந்தாலும், நீங்கள் யாராயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தேவன் இன்னமும் பேசுகிறார். நீங்கள் ஒரு பாவியாயிருந்தாலும், நீங்கள் ஒரு வேசியாயிருந்தாலும், விபச்சாரியாயிருந்தாலும், நீங்கள் ஒரு குடிகாரனாயிருந்தாலும், நீங்கள் ஒரு உள்ளூர் சபை அங்கத்தினராயிருந்தாலும், (என்ன?) பெயரளவில் உள்ள சபை அங்கத்தினராயிருந்தாலும், நீங்கள் என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தேவனுடைய சத்தமானது உங்களிடத்தில் பேச இன்னமும் காத்திருக்கிறது. 82 நான் இப்பொழுது மோசேயைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவன் ஏற்கனவே எண்பது வயதானவனாயிருந்தபோது, எண்பது வருடக் கால வேத சாஸ்திர பயிற்சியை உடையவனாயிருந்தான். அவன் வேதவாக்கியங்களை அறிந்திருந்தான், அவன் அவைகளை நன்கு அறிந்திருந்தான். அவன் தன்னுடைய ஜனங்களை விடுவிக்கப் போகிறவனாயிருந்தான் என்ற ஒரு வாக்குத்தத்தை உடையவனாயிருந்தான். ஆனால் அதே சமயத்தில் வேத வாக்கியங்களை அறிந்திருந்தும், அந்நாளின் நவீன சபையின் சம்பிரதாயமான சபை அங்கத்தினனாயிருந்தபடியால் அவன் அந்தக் காரியத்தைத் தன்னுடைய சொந்தக் கரங்களில் எடுத்துக் கொண்டு, அதைச் செய்ய முயற்சித்தான். அப்பொழுது அவன் ஒரு எகிப்தியனைக் கொன்று போட்டான். தேவனுக்குச் செவிகொடாமல் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே பார்க்கிறீர்களா? நீங்கள் அதை அப்படியே குழப்புகிறீர்கள். 83 பிசாசு இந்தக் காலையில், “நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டாம்” என்று கூறும். மற்றொருவரோ, “ஓ! அதைப் பின்னர் செய்யுங்கள்” என்று கூறுவார். ஒருவர், “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பது மேலானதாகும்” என்று கூறுவார். மற்றொருவர், “நீங்கள் ஒரு நல்ல நேரத்தை இழக்கப் போகிறீர்கள்” என்று கூறுவார். அதனைத் தீர்க்க ஒரே வழி அதனோடு தேவனுடைய வார்த்தையண்டைக்குச் செல்வதே ஆகும். ஆனால் ஜனங்களோ இன்றைக்கு அதனைச் செய்ய விரும்புகிறதுபோன்று தென்படுகிறதில்லை. 84 மோசே மிகச் சிறந்த ரபீமார்களண்டை இருந்து வந்தான். ஆனால் அவர்களோ சம்பிரதாயத்தையும், குளிர்ந்துபோன முறைமைகளையும் உடையவர்களாக இருந்தனர். மோசே எவ்வாறு நாணலுக்குள் மறைக்கப்பட்டான் என்றும், பெரிய முதலைகளினால் எப்படி அவனைப் பிடிக்க முடியவில்லை என்பதையும் குறித்து அவனுடைய தாய் தனக்குக் கூறின கதையை அவன் கேட்டிருந்தான். எப்படியாக அந்தச் சிறு குழந்தை அந்த நீரோடையில் மிதந்து கொண்டிருந்தது? அங்கே… 85 அந்த வயதான முதலைகளோ கொழுத்துப் போயிருந்தன. (இதைச் சிறு பிள்ளைகளுக்காகச் சொல்லுகிறேன்). அவைகள் அந்தச் சிறு குழந்தைகளைத் தின்றே கொழுத்துப் போயிருந்தன. அந்த வயோதிகக் கொக்கி மூக்கினைக் கொண்ட ஸ்திரீகள், அரண்மனைக் காவல்கார ஸ்திரீகள், ஒருபோதும் ஒரு குழந்தையைப் பெற்றிராதவர்கள், ஒரு குழந்தையின் அன்பு எப்படிப்பட்டது என்பதையே அறியாதிருந்தனர். ஏன், அவர்கள் வெறுமனே, அங்குச் சென்று அந்தச் சிறு குழந்தைகளை எடுத்து, கொன்று, அவைகளை ஆற்றில் வீசினர். அந்தச் சிறு குழந்தைகளினிமித்தமாக அந்த வயோதிக முதலைகள் கொழுத்துப் போயிருந்தன. 86 அதே சமயத்தில் தேவன் அந்தத் தாயினுடைய இருதயத்தில் மரணத்தருவாயில் உள்ள அவளுடைய குழந்தைக்கு ஒரு வழியை ஏற்பாடு செய்யத் தூண்டினார். அது கிறிஸ்துவிற்கு ஒரு மாதிரியாயிருந்ததை நீங்கள் காணவில்லையா? அவர் மரணத்திற்குள்ளாகச் சென்றார். அந்த வயதான முதலைகள் ஒவ்வொன்றுமே ஆற்றில் சென்று கொண்டிருந்த அந்தச் சிறியப் பெட்டியண்டை வரும். ஆனால் அவைகளால் ஏன் அதனை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தச் சிறு குழந்தையை ஏன் அவைகளால் சாப்பிட முடியாமற் போயிற்று? அங்கே ஒரு தூதன் அமர்ந்து கொண்டிருந்தான். அவன், “இங்கிருந்து தூரமாய்ப் போங்கள்” என்றான். 87 ஏன்? தேவன் தம்முடைய ஜனங்களை தம்முடைய தூதர்கள் கவனித்துக்கொள்ளும்படி கட்டளையிடுகிறார். தேனே, நீ பயமடையவில்லையா? தேவன் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். பிசாசு உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய முயற்சிக்கலாம். ஆனால் தேவனோ பெரியவராயிருக்கிறார். புரிகிறதா? எனவே எல்லா முதலைகளும் அந்தச் சிறுபெட்டியினிடத்திலிருந்து ஓடவேண்டியதாயிற்று. 88 அதே சமயத்தில் மோசே இந்த எல்லா காரியங்களையும் அறிந்திருந்தான். ஆயினும் நாற்பது வருடப் பயிற்சிக்குப் பிறகு, அதன் பின்னர் வனாந்திரத்தில், அவன் இன்னமும் தன்னுடையக் கரங்களில் அந்தக் காரியத்தை எடுத்துச் செல்ல முயன்றான். 89 நாம் வேதத்தை அறிவோம். என்ன செய்ய வேண்டும் என்று தேவன் கூறுகிறார். அதே சமயத்தில் நாமோ, “நல்லது, இப்பொழுது நாம் இதை இந்தவிதமாகச் செய்வோம். இனி அற்புதங்களின் நாட்களே ஒருபோதும் இருக்காது. நாம் இனி அவைகளை காண்பதாக நம்புகிறதில்லை என்பதையும் நாம் அறிவோம். அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று நாம் விசுவாசிக்கிறோம். முழுக்குதலைப் போன்றே தெளித்தலும் அவ்வளவு நல்லதாகத்தான் உள்ளது. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைப் போன்றே பிதா, குமாரன், பரிசுத்த ஆவியும் அவ்வளவு நல்லதாகவே உள்ளது. எனவே நாம் அப்படியே…மற்றவர்கள் எல்லோருமே அந்தவிதமாகவே சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே நாமும் கூட அதைச் செய்வோம்” என்கிறோம். 90 மோசே ஒரு இராணுவ மனிதனாயிருந்து வந்தான். எனவே அவன் ஒரு இராணுவ மனிதனாயிருக்கின்றபடியால் தன்னுடையக் கரத்தினால் எகிப்தியர்களைக் கொன்றுபோட முடியும் என்றும், அந்தவிதமாக அவன் பயிற்றுவிக்கப்பட்டிருந்ததையும் எண்ணிப் பார்த்தான். “தேவன் எதைச் செய்தாரோ அதுவே அவ்வளவு நன்மையாயிருக்கும்”. நீங்கள் அதைக் குறித்து எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? ஒரு மனிதனைக் கொன்றதற்காக ஒவ்வொருவரும் மோசேயை கடிந்து கொள்கின்றனர். ஆனால் அவன் அங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு திரும்பி வந்து எல்லோரையும் கொன்றுபோட்டபோது, எவரும் அதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவன் பார்வோனுடைய சேனை முழுவதையுமே கொன்றுபோட்டான். ஆனால் தேவன் அதில் இருந்தார். அந்த முதலாவது ஒன்றிலோ தேவன் இருக்கவில்லை. 91 அப்பொழுது மோசே சபை சாஸ்திரம் முழுவதையும் அப்படியே ஒதுக்கித் தள்ளினான். அவன் அடுத்த பார்வோனாக இருக்க வேண்டியவனாக இருந்தான். ஆனால் அவன் இன்னமும் தேவனை அறியாதிருந்தான் என்பதைக் கண்டறிகிறோம். 92 ஆனால் ஒரு நாள் காலையில் வனாந்திரத்தின் பின்புறத்தில், எண்பது வயதான வயோதிகன் தன்னுடைய கன்னத்தில் உள்ள முடிகள் கீழே தொங்க, அவன் ஒரு எரிகின்ற முட்செடியைக் கண்டான். எனவே என்ன நடக்கப் போவதாக இருந்தது என்பதைக் காணும்படித் திரும்பினான். அவன் புதரண்டை நெருங்கினபோது, அவன் ஒரு சத்தத்தைக் கேட்டான். தேவன் அவனிடத்தில் பேசுவதற்கு முன்பு அவர் நாற்பது வருடங்களாக அவனை அமைதிபடுத்த வேண்டியதாயிருந்தது. தேவன் நம்மிடத்தில் பேசும்படிக்கு நாம் இந்நாளில் பெற்றுள்ள எல்லா குமுறலோடும், குழப்பத்தோடும் பத்து நிமிடங்கள் அமைதியாகத் தரித்திருக்கமாட்டோம். 93 அதே சமயத்தில் மோசே நாற்பது வருடங்களுக்குப் பிறகும் அந்த முட்செடியின் பிரசன்னத்தில் அங்கே நின்றான். அவனை அழைத்த அந்த ஒரு சத்தத்தினால், அவன் தனக்கு கற்பிக்கப்பட்டிருந்த எண்பது வருட எல்லாப் பயிற்சிகளைக் காட்டிலும், ஐந்தே நிமிடங்களில் தேவனைக் குறித்து அதிகமாக அறிந்து கொண்டான். அது அவனை ஒரு வித்தியாசமான மனிதனாக்கிற்று. 94 நீங்களும் சாமுவேல் செய்ததுபோல, அவருடைய சத்தத்தைக் கேட்கப் போதுமான நேரம் அப்படியே நிற்பீர்களேயானால் அது உங்களையும் ஒரு வித்தியாசமான மனிதனாகவும், ஸ்திரீயாகவும் ஆக்கும். அப்படியே நில்லுங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். உங்களுக்குத் தேவனைக் குறித்த ஏதோ ஒரு காரியம் வேண்டுமென்றால், அவரிடத்தில் கேளுங்கள்; அதன் பின்னர் அப்படியே நின்று, அதைக் குறித்து அவர் என்ன கூறப் போகிறார் என்று புரிந்து கொள்ளும்படி செவி கொடுங்கள். அப்படியே உங்களுடைய இருதயத்தைத் திறந்து, “கர்த்தராகிய இயேசுவே, இதைக் குறித்து என்ன?” என்று கேளுங்கள். அப்படியே அங்கே தரித்திருங்கள். அவர் முதலில் ஐந்து மணி நேரமாக பதிலளிக்கவில்லையென்றாலும், அதன் பின்னர் மற்றொரு ஐந்து மணிநேரம் காத்திருங்கள். அவர் இன்றைக்குப் பதிலளிக்கவில்லையென்றால், அப்பொழுது அவர் நாளைக்குப் பதிலளிப்பார். அவர் இந்த வாரம் பதிலளிக்கவில்லையென்றால் அவர் அடுத்த வாரம் பதிலளிப்பார். அவர் பதிலளிக்கும் வரையில் அங்கே தரித்திருங்கள். 95 உங்களுடைய இருதயத்தில் அவருடைய சத்தம் திரும்பப் பேசுவதையும், “ஆம், நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” என்று கூறுகிறதற்கும் செவிகொடுங்கள். அதன் பின்னர் அவையாயும் முற்றுப்பெற்றுவிடும். அப்பொழுதே உங்களால் தீர்வைக் காணமுடியும். புரிகின்றதா? “நானே உன்னுடைய எல்லாப் பாவங்களையும் மன்னிக்கிற கர்த்தர். இப்பொழுது போ, இனி பாவம் செய்யாதே. நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை”. அதன்பின்னர் உங்களால் சுயாதீனமாகச் செல்ல முடியும். நீங்கள் சரியாயிருக்கிறீர்கள். ஆனால் அந்தச் சத்தம் பேசுகிறதை நீங்கள் கேட்க வேண்டும் என்ற நிச்சயமுடையவர்களாக இருக்க வேண்டும். மோசே அதை கேட்டான். அவன் ஒரு மாற்றமடைந்த மனிதனாய் இருந்தான். 96 தீர்க்கதரிசி ஏசாயாவை நோக்கிப் பாருங்கள். ஒரு வாலிப மனிதனாயிருந்தபோது, அவன் அதைச் செய்திருந்தான். மகத்தான ஆதரவைக் கொண்ட உசியா இராஜாவின் நாட்களில் ஒரு நீதியுள்ள மனிதனாய், ஒரு நல்ல மனிதனாயிருந்தான். அவன் ஏசாயாவை நேசித்தான். ஏனென்றால், அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் அப்படியே இராஜாவினுடைய கரத்தின் பேரிலேயே சாய்ந்திருந்தான். அவனுக்குத் தேவைப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும், ஏன்? உசியாவே அதை அவனுக்குக் கொடுத்தான். ஒவ்வொரு நேரத்திலும் அவனுக்குத் தேவைப்பட்ட எந்தக் காரியத்தையும், ஏன்? இந்த நல்ல இராஜாவே அதை அவனுக்குக் கொடுப்பான். ஆனால் அந்த இராஜா மரித்துப்போன ஒரு நேரம் வந்தது. 97 செழிப்பு எப்பொழுதுமே ஜனங்களைப் பாழாக்குகிறது. அது கூறுவதற்கு ஒரு கடினமானக் காரியமாயிருக்கிறது. ஆனால் செழிப்பு ஒரு மனிதனைத் தேவனிடத்திலிருந்து தூரக் கொண்டு செல்கிறது. தேவன் வேதாகமத்தில் ஓர் இடத்தில் இதன் பேரிலான ஏதோ ஒரு காரியத்தைக் கூறியுள்ளார். அவர், “நான் உன்னை ஆசீர்வதித்தபோது, உனக்கு மிகுதியாக அளித்தேன். நீ தரித்திரனாயிருந்தபோது, நீ ஒன்றுமில்லாதிருந்தாய். அப்பொழுது நான் உன்னண்டை வந்தபோது, நீ எனக்குச் செவிகொடுத்தாய், நீ என்னை சேவித்தாய், ஆனால் நான் உன்னை ஆசீர்வதித்து, உனக்குச் சம்பூரணமாய் அளித்தபோதோ, நீ என்னிடத்தில் இறுமாப்புக் கொண்டாய்” என்றார். அதைத்தான் அமெரிக்கா செய்திருக்கிறது. அது கர்வம் கொண்டுள்ளது. 98 அதைத்தான் சபையும் செய்துள்ளது. உங்களால் அந்த மூலைகளில் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புக் கொண்ட மகத்தான பெரிய கட்டிடங்களை அமைத்துக் கொள்ள முடிந்தது. அதற்குள்ளே ஒவ்வொரு காரியமும் எவ்வளவு எளிதாக இருக்க முடியுமோ அவ்வளவு எளிதாக அமைத்துக் கொண்டுள்ளீர்கள். எனவே தேவனுடைய சத்தத்தைக் கேட்க உங்களுக்கு நேரமில்லை என்பதில் வியப்பொன்றுமில்லையே. ஆனால் அது எடுக்கப்படும் நேரம் வரும்வரை காத்திருங்கள். அப்பொழுது அதைக் கேட்க வாஞ்சிப்பீர்கள். இப்பொழுது ஒவ்வொரு காரியமும் அருமையாயிருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்தவிதமாய் இல்லாமற்போகும் ஒரு நேரம் வந்து கொண்டிருக்கிறது. 99 எனவே ஏசாயா, அவனால் அந்த இராஜாவினுடைய கரத்தின் பேரிலேயே சார்ந்திருக்க முடிந்தது. அவன் ஒரு தயைப்பெற்ற வாலிப மனிதனாகவும், இந்த வாலிப மனிதனுக்குள் அருமையான ஆவியை உடையவனுமாயிருந்தபடியால் இராஜா அவனை நேசித்தான். ஒருநாள் அவனுக்கு இருந்த ஆதரவுகள் பிடுங்கப்பட்டன. அதாவது இராஜா மரித்துப் போனான். இராஜா மரித்துப் போனபோது, அப்பொழுது அவன் சுற்றும் முற்றும் நோக்கிப் பார்க்கத் துவங்கினபோது, அவன் இராஜாவைப் போல எவரையும் கண்டறியக் கூடாமற் போயிற்று. 100 இந்நாட்களொன்றில் இதைப் போன்ற இந்த ஸ்தாபனப் பாகுபாடற்றக் குழுவிலிருந்து உதைத்துத் தள்ளப்படுவீர்கள். அப்பொழுது நீங்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சார்ந்துகொள்ள வேண்டியதான ஒரு நேரம் வரும், இல்லையென்றால் உங்களால் ஆராதிக்க முடியாது. நீங்கள் அறிந்துள்ளபடி அது உண்டாகும் என்று வேதம் கூறுகிறது. அவர்கள் இப்பொழுது உங்களைப் பரியாசம் செய்வார்கள். ஆனால் அங்கே ஒரு புறக்கணிப்பு உண்டாயிருக்கும் நேரம் ஒன்று உண்டு, ஏனென்றால் மிருகத்தின் முத்திரை வரவேண்டும். நீங்கள் ஒன்று சபைகளின் ஆலோசனை சங்கத்தை சார்ந்து கொள்ள வேண்டும். அது ரோமாபுரியில் உள்ள மிருகத்தைப் போன்றிருக்கும், இல்லையென்றால் நீங்கள் ஆராதிக்கவே முடியாது. அதைத்தான் வேத வாக்கியம் கூறுகிறது. அப்பொழுதுதான் நீங்கள் ஏசாயா கதறினபோலக் கதற வேண்டியதாயிருக்கும். 101 அவன் ஆலயத்திற்குள் சென்றான். அப்பொழுது அவன் தெளிவாக உணர்ந்தான். அவன் தன்னுடைய கரங்களை உயர்த்தி, “ஓ, கர்த்தாவே, நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்று கூறினான். நீங்கள் நல்லவர்கள் என்று உங்களை நீங்களே நினைத்துக் கொள்ளுகின்றீர்கள். ஆனால் அந்த நேரம் வரும்வரை காத்திருங்கள். “நான் அசுத்த உதடுகளுள்ள ஜனங்களுக்கு மத்தியில் குடியிருக்கிறேன்.” அவன் என்ன செய்தான்? அப்பொழுது அவன் பதறலடைந்தான். 102 நீங்கள் இந்தக் காரியத்தைக் குறித்து பதறலடையும்போது, ஏதோக் காரியம் சம்பவிக்கும். நீங்கள் போதுமான அளவுப் பதறல் கொள்கிறதில்லை. “ஓ, நல்லது, நான் சபையைச் சேர்ந்து கொண்டேன். அதுவே அதற்குத் தீர்வாகிறது”. ஆனால் நீங்கள் அதைக் குறித்துப் பதறல் கொள்ள வேண்டும். உங்களுக்கு உண்மையிலேயே தேவன் தேவையாயிருக்க வேண்டும். 103 இயேசு, “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” என்றார். 104 ஆனால் நீங்கள் உலகத்தின் காரியங்களோடு திருப்தியடைந்திருக்கும் வரையில் எப்படித் தேவனால் உங்களிடத்தில் பேசமுடியும்? நீங்களோ, “தேவன் என்னிடத்தில் ஒருபோதும் பேசினதேயில்லை” என்கிறீர்கள், ஏன்? அவர் பேச விரும்புகிறார். ஆனால் நீங்களோ உலகத்தின் காரியங்களினால் அதிகமாய் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள். அதுதான் இன்றைக்கு நம்மோடுள்ள காரியமாயிருக்கிறது. நாம் நம்முடைய எல்லா நேரங்களையும், உலகத்தின் காரியங்களின் பேரிலும், உலக இன்பங்களின் பேரிலும் ஒதுக்கி வைத்துவிட்டு, தேவனுக்கோ நேரத்தையே அளிக்கிறதில்லை. அது உண்மை. 105 இப்பொழுது ஏசாயா பதறலடைந்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். எனவே அவன் கூச்சலிட்டு, தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு, ஜனங்களின் பாவங்களையும் அறிக்கையிட்டான். அவன் அறிக்கை செய்து கொண்டிருந்தபோது அவன் தனக்கு மேலே ஒரு சத்தத்தைக் கேட்டான். அப்பொழுது அவன் நோக்கிப் பார்த்தபோது, அங்கே கட்டிடத்தினூடாகக் கேரூபின்கள் முன்னும் பின்னும் பறந்து கொண்டிருந்தன. செட்டைகளால் தங்களுடைய முகங்களை மூடி, செட்டைகளால் தங்களுடைய கால்களை மூடி, மற்றச் செட்டைகளால் பறந்து, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தன. 106 ஏதோக் காரியம் சம்பவித்துக் கொண்டிருந்தது. ஏசாயா பதறலடைந்தான். தேவன் பணியின் பேரில் வந்தார். அப்பொழுது ஏசாயா, “நான் அசுத்த உதடுகளுள்ளவனாயிருக்கிறேன்” என்று கூச்சலிட்டான். ஏனென்றால், ஒரு சத்தம் பேசியிருந்தது. அது அவனை மாற்றிவிட்டது. 107 அந்த சத்தம், “யார் நமது காரியமாய்ப் போவான்?” என்று உரைத்தது. “யார் போவான்?” இந்த ஒரு கூட்ட வேத சாஸ்திரிகளுக்கு மத்தியில் அந்தப் பிளவில் மனப்பூர்வமாய் நிற்கக் கூடியவன் யார்? யார் இந்த நாளில் போய், நான் இன்னமும் தேவனாயிருக்கிறேன் என்று உரிமை கோருவார்? [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கப் பீடத்தை இரண்டு முறைத் தட்டுகிறார்.—ஆசி.] அவர்களுடைய அசுத்தத்தைக் கண்டிக்கும்படி யார் போவார்? அவர்களுடைய ஸ்தாபனங்களைக் கிழித்தெறிந்து, மீண்டும் ஜீவனுள்ள தேவனுடைய வல்லமைகளை யார் கட்டியெழுப்புவார்? யார் போவார்?” 108 ஏசாயாவோ, “கர்த்தாவே, நான் போகும் முன்னே, நான் மாற்றியமைக்கப்பட வேண்டியவனாயிருக்கிறேன்” என்றான். இந்தச் சில சிறு பயங்களும், குழப்பங்களும் அவனை விட்டுப் போக வேண்டியதாயிருந்தது. 109 தேவனுடைய ஒவ்வொரு தனிப்பட்ட அழைப்பும் அவ்வண்ணமாகவே இருக்கும். நீங்கள் மறுபடியும் பிறந்து, மாற்றமடைந்து, புதிதாக்கப்பட வேண்டும், கற்பனையல்ல; ஆனால் உங்களுடைய இருதயத்திலிருந்து ஏதோ காரியம் உண்மையாகவே சம்பவிக்கிறது. தூதர்களில் ஒருவன்…“நீங்கள் கேட்டுக் கொள்வீர்களேயானால், நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்”. 110 தூதர்களில் ஒருவன் வெண்கல பலிபீடத்தண்டைச் சென்று குறட்டை எடுத்து அக்கினித் தழலண்டை சென்று அதிலிருந்து எடுத்து, ஏசாயாவினண்டை ஓடி, அதை அவனுடைய வாயிலே வைத்தான். பின்னர், “இப்பொழுது நீ சுத்தமாயிருக்கிறாய். போய் வார்த்தையைப் பேசு” என்றான். ஏசாயா சத்தத்தைக் கேட்ட பிறகு அவன் மாற்றப்பட்டான். 111 அதன் பின்னர் அதற்குப் பின்னிருந்த அவனுடைய வருடங்களில் அவன் ஒரு முழு வேதாகமத்தையே எழுதினான். அவன் ஆதியாகமத்தில் துவங்கி, வெளிப்படுத்தின விசேஷத்தில் முடித்தான். வேதாகமம் அறுபத்தி ஆறு புத்தகங்களைக் கொண்டது. ஏன்? காரணம் அவன் பதறலடைந்தான். ஒரு நேரத்தில் அது அதிகமாகத் தேவைப்பட்டதை அவன் அங்கு கண்டான். 112 பாபிலோனில் தானியேல், நாம் கடந்த இரவு அவனைக் குறித்துப் பேசினோம். அவன் தன்னை எந்த பாபிலோனிய உபதேசங்களினாலும் தீட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தை தன்னுடைய இருதயத்தில் கொண்டிருந்தான். ஆனால் ஒருநாள் அங்கே தானியேலுக்கு ஒரு தேவை ஏற்பட்டது. அவன் தேவனுடையச் சத்தத்தைக் கேட்கும்படி விரும்பினான் என்பதை அவன் அறிந்திருந்தான். அதே சமயத்தில் அவன் வேத வாக்கியங்களை அறிந்திருந்தான். ஆனாலும் அவனுக்குத் தேவனுடைய சத்தத்தைக் கேட்க வேண்டுமென்றிருந்தது. எனவே அவன் ஒரு குறிப்பிட்ட நதியண்டைச் சென்றான். அவன் வெறுமனே அங்குச் செல்லாமல், தன்னுடைய இரதத்தை நிறுத்துவிட்டு, அங்கிருந்த நாணற்செடிப் புதரண்டை முழங்காற்படியிட்டு, “தேவனாகிய கர்த்தாவே, நான் உமக்குச் செவி கொடுக்க விரும்புகிறேன், நீர் எங்கே?” என்று கேட்டான், இல்லை, நீங்கள் அதை அந்தவிதமாகச் செய்கிறதில்லை. ஏசாயா தன்னுடைய இரதத்தை எடுத்துக் கொண்டு, இரத ஓட்டுனர்களோடு ஆற்றண்டை சென்று, அவர்களைத் திரும்ப அனுப்பிவிட்டான். ஆனால் இவனோ அவர் பேசுவதைக் கேட்கும் வரை அங்கே தரித்திருக்கப் போவதாயிருந்தான். அதுவே வழியாகும். அவன் அதைக் குறித்து பதறல் கொண்டான். 113 தானியேல் தன்னிடத்தில், “இதுதான்! தானியேலே நீ இதைச் செய், தானியேலே நீ இதைச் செய்” என்று அவனிடம் கூற முயற்சித்துக் கொண்டிருந்த எல்லா வேத சாஸ்திர பண்டிதர்களையும், ஞானவான்களையும், வானசாஸ்திரிகளையும், போர்வீரர்களையும் விட்டு தூரமாய்ச் செல்ல வேண்டியவனாயிருந்தான். ஆனால் அவன் அவை எல்லாவற்றிலிருந்தும் தூரமாய் விலகியிருந்தான். அந்த விதமாகத்தான் நீங்களும் செய்ய வேண்டும். அவன் ஆற்றண்டைக்குச் சென்று இருபத்தியோரு நாட்களாக அங்கே தரித்திருந்து கர்த்தருடைய தூதனோடு போராடினான். 114 ஆனால் அவன் தண்ணீர்களின் மேலே நோக்கிப் பார்த்தான் என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. அப்பொழுது அங்கு ஒரு தூதன் தன்னுடைய பாதத்தைப் பூமியின் மேலும், மற்றொரு பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும் வைத்து நிற்கிறதைக் கண்டான். அந்தத் தூதன் தன்னுடைய கரங்களை உயர்த்தி, “தானியேல் கண்ட காரியங்கள் நிறைவேறும்போது இனிக் காலம் செல்லாது” என்று என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிட்டான். அந்தத் தேசத்தின் பொல்லாங்கின் நிமித்தமாக இருபத்தியோரு நாட்கள் அவர் காலதாமதப்படுத்தி வந்தார். 115 பெர்சியா இராஜாவின் நாட்களில் அந்த தேசத்தின் பொல்லாங்கினிமித்தமாக அவர் இருபத்தியொரு நாட்கள் கால தாமதப்படுத்தியிருந்திருப்பாரேயானால் இந்நாளில் அவர் என்ன செய்வார்? அவர் எவ்வளவு காலம் தாமதப்படுத்தக்கூடும்? ஆனால் அந்த மரிக்காத விசுவாசத்தோடும், மானிட இருதயத்தில் உள்ள அந்தப் பசியோடும், வாஞ்சையோடும், தேவனண்டை மறுப்புக் கூறாமல், பரலோகத்திலிருந்து தேவன் பேசுகிற வரையிலும் அப்படியே நிலைத்திருங்கள். நீங்கள் இதனைக் கொண்டு, இந்தச் சுவிசேஷத்தைக் கொண்டு விளையாட முடியாது. இது விளையாடப்படுவதற்கானதல்ல. இது பரிபூரணமாக குறியிலக்கில் படவேண்டும். அது பரிபூரணமாயிருக்க வேண்டும். இல்லையென்றால் அது சரியாயிருக்காது. அது கிரியைச் செய்யாது. அது பரிபூரணமாயிருக்க வேண்டும். தானியேல் ஜெபித்தான். 116 அப்போஸ்தல நடபடிகளின் புத்தகம் 8-ம் அதிகாரம், 7-வது இல்லை 8-வது அதிகாரத்தில் தன்னைத்தானே பரிசேயனாக்கிக் கொண்ட சவுல் என்னும் பெயர் கொண்டவனை நாம் வேதத்தில் கண்டறிகிறோம். ஓ, அவன் சரியாக ஒரு வேத பண்டிதனாயிருந்தான். அவன் கமாலியேலின் போதனையின் கீழ் அமர்ந்திருந்து எல்லா வேத வாக்கியங்களையும் அறிந்திருந்தான். அவன் அந்நாளின் வேத பண்டிதர்களுக்கேற்றபடி, அவ்வாறு இருக்க வேண்டிய விதத்தில் சரியாக, ஓ, சுயபாணியைக் கொண்டவனாயும், தன்னைத்தானே அவ்வாறு உருவாக்கிக் கொண்டவனுமாயிருந்தான். ஆவிக்குரியப் பிரகாரமாயிருந்த ஏதோ ஒரு காரியத்தை ஜனங்கள் செய்கிறதை அவன் கண்டபோது, அவனுடைய மனிதனால் உண்டாக்கப்பட்ட வேத சாஸ்திரம் அதனோடு இசைந்துச் செல்லவில்லை. 117 அது இன்றைக்கு என்னே ஒரு இணையாக உள்ளது. அநேக ஜனங்கள் தங்களுடைய இருதயங்களில் நேர்மையாயும், உத்தமமுமாயிருக்கிற மறுபடியும் பிறந்திருக்கிற ஜனங்களை பைத்தியம் பிடித்தவர்கள் என்று நினைக்கின்றனர். அவர்கள் தெய்வீகச் சுகமளித்தல் மற்றும் பரிசுத்த ஆவியின் வல்லமைகள் போன்றவைகளைக் குறித்த ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து பேசுகிறார்கள் என்றே இவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மையாகும். 118 சவுல் ஒரு நாள் கூச்சலிட்டுக் கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும் மேலும், கீழும் குதித்துக் கொண்டும், அந்நிய பாஷைகளில் பேசி, வியாதியஸ்தரைச் சொஸ்தமாக்கின அந்த முழு கூட்ட பரிசுத்த உருளைகளையும், தான் போய் அழிக்கும்படிக்கு சபை பேராயரிடத்திலிருந்து பெற்ற கட்டளைகளைத் தன்னுடைய சட்டைப் பையில் வைத்துக்கொண்டு தமஸ்குவிற்குச் செல்லும் தன்னுடைய வீதியில் இருந்தான். வேத பண்டிதர்களோ, “ஏன்? அது ஒரு கூட்ட பிசாசுகள்” என்று கூறினர். “போய் அவர்களைக் கைது செய்து சங்கிலியினால் பிணைத்து இங்கே திருப்பிக் கொண்டுவா!” 119 “நிச்சயமாக, பேராயரே! உம்முடைய ஆணையின்படியே ஆகக்கடவது!” ஓ, என்னே! ஓ அவன் ஒரு மகத்தான மனிதனாய் இருந்தான். அவன் D.D., Ph.D. போன்ற வேத பாண்டித்துவப் பட்டங்களையெல்லாம் உடையவனாயிருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவன் தன்னுடையக் குதிரையின் மீது ஏறி, புறப்பட்டுச் செல்ல, அவனோடு ஒரு கூட்டமும் சென்றது. 120 ஆனால் ஏறக்குறைய பிறபகல் வேளையில் அவன் தன்னுடைய வழியில் சென்று கொண்டிருந்தபோது, ஏதோ ஒன்று அவனைத் தரையில் வீழ்த்தியது. அப்பொழுது அவன் ஒரு பைத்தியக்காரனைப்போல நுரை தள்ளிக்கொண்டுத் தூசியில் புரண்டான். அப்பொழுது அவன், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று கூறுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அது என்னவாயிருந்தது? ஏதோ ஒரு வேத சாஸ்திரி அவனிடத்தில் பேசவில்லை. ஆனால் பரலோகத்திலிருந்து ஒரு சத்தம், “நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது. 121 ஒருவேளை அவன் மண்ணிலே நிலைதடுமாறி விழுந்து, புருவமெல்லாம் புழுதியால் நிறைந்திருக்க, அவனுடைய கன்னங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியிருக்கலாம். அப்பொழுது அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். ஓர் ஒளி அவனுடைய கண்களைச் சுற்றி பிரகாசித்தபோது, அவன் ஒரு வௌவாலைபோலக் குருடனானான். 122 அங்கே அவனுக்கு முன்பாக பெரிய அக்கினி ஸ்தம்பம் நின்றது. அதிலிருந்து ஒரு சத்தம், “நீ துன்பப்படுத்திக் கொண்டிருக்கிற இயேசு நானே. உன்னுடைய மனிதனால் உண்டாக்கப்பட்ட போதனை தவறாயிருந்து வருகிறது” என்று உரைத்தது. அது என்னவாயிருந்தது? ஒரு பிரத்தியட்சமான தரிசனமாயிருந்தது. தேவனுடைய வார்த்தை உண்மையாக்கப்பட்டது. 123 ஓ, சகோதரர்களே, இன்றைக்கு அதுதான் தேவையாயிருக்கிறது. அதைப்போன்று இன்னும் அதிகமும் தேவையாயிருக்கிறது. 124 நான் கர்த்தருக்கு நன்றி கூற விரும்புகிறேன். கடந்த இரவு சக்கர நாற்காலிகளில் இருந்த இந்த சிறுப்பெண் பிள்ளைகள் இன்றைக்குச் சக்கர நாற்காலிகளில்லாமலேயே நடந்து வருகிறார்கள். அவர்கள் இயல்பாகவே நடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஹு ஹு. அங்கு அமர்ந்துள்ள பெண்பிள்ளைகளே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. [சபையோர் களிகூறுகின்றனர்—ஆசி.] அது என்ன செய்தது? இயற்கைக்கு மேம்பட்ட சத்தத்தில் அங்கே அன்று பேசின அதே இயேசுவானவர் இன்றைக்கு இன்னமும் பேசுகிறார். 125 “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” சவுல் மாற்றமடைந்த ஒரு மனிதனாயிருந்தான். 126 அவர் கலிலேயாவில் நடந்தபோது அவர் செய்தது போன்று, ஜீவனுள்ள தேவனுடையச் சத்தம் பேசுகிறதை ஜனங்கள் காணும்போதும், கேட்கும்போதும் அவர்கள் இன்றைக்கு மாற்றமடைய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். ஓ, நிச்சயமாகவே! 127 “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” அது என்ன செய்தது? அவர் அவனை ஒரு வேத சாஸ்திரப் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவனுக்கு ஏதோ ஒரு புதிய வேத சாஸ்திரத்தைப் போதித்தாரா? இல்லையே. அவர் அவ்வாறு செய்யவில்லையே. அவர் என்ன செய்தார்? அவர் அவனிடத்தில் பேசினார். ஒரு மேகத்தினூடாக ஒரு சத்தம் நேரடியாக வெளிப்படையாக பேசினது. அது என்னவாயிருந்தது? அது சீனாய் மலையிலிருந்து முழங்கின அதே தேவனாகும். 128 கூட்டங்களில் பரிசுத்த ஆவியானவர் வருகிற இடங்களில் நீங்கள் ஒரு மானிடச் சத்தம் மாற்றப்படுகிறதை கேட்கிறீர்கள். அவர்கள் மொழியின் முதல் எழுத்துக்களையே அறியாதிருக்கையில், கிறிஸ்துவானவரால் அந்தச் சத்தத்தை எடுத்து சர்வ வல்லமையுள்ள தேவனின் இரகசியங்களை பேச முடிகிறது. அது இப்பொழுது அவருடையப் பிரசன்னத்தில் அமர்ந்துள்ள ஒவ்வொரு புருஷனையும், ஸ்திரீயையும் மாற்ற வேண்டியதாயுள்ளது. அவன், “நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன்” என்றான். ஓ, நாம் மிகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம். அவ்வாறில்லையெனில், அது எல்லாவற்றைப் பார்க்கிலும் தெளிவாக வெளிப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். ஆனால் நாமோ அந்தச் சத்தம் பேசுகிறதை கேட்கத் தவறும் வரையில் நாம் நம்முடையச் சபைகளிலும், நம்முடைய வேத சாஸ்திரத்திலும், நம்முடையச் சிந்தனையிலும், நம்முடைய ஜீவிய வழிகளிலும் மிகவும் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருப்போம். 129 அவர்களோ, “ஓ” “இது மனோவசியமாயிருக்கலாம். இது இதுவாயிருக்கலாம், அதுவாயிருக்கலாம், அல்லது மற்றதாயிருக்கலாம் என்பதை நீங்களே அறிவீர்கள்” என்கிறார்கள். 130 மோசே, “அது அந்த முட்செடியில் இருந்த ஒரு பிசாசா என்றே யூகிக்கிறேன்” என்று கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? ஹூ! மோசேவிற்கோ எவ்விதக் கேள்விகளுமே இல்லை. அவன் அந்தச் சத்தத்தைக் கேட்டான். 131 நீங்களோ, “ஓ, அது என்னுடைய மனசாட்சியே என்னிடம் அதை அப்படியே கூறுகிறதாயிருக்கலாம்” என்று கூறலாம். 132 நீங்கள் ஒரு தேவனுடைய பிள்ளையாயிருந்தால், அது அவருடையச் சத்தமாயிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கின்றன.” அவைகள் அறிந்து கொள்ளும். 133 பேதுரு என்னும் பெயர்கொண்ட மற்றொரு மனிதனும் இரட்சிக்கப்பட்டிருந்து, ஆவியினாலும்கூட நிரப்பப்பட்டிருந்தான். ஆனால் அவன் இன்னமும் முன்னோர்களின் பாரம்பரியங்களில் சார்ந்திருக்க விரும்பினான். அவன் அறிந்து கொள்ள விரும்புவதெல்லாமே இங்கே வார்த்தையில் இருந்தது. ஒருநாள், அவன் மேல் வீட்டில் இருந்தபோது, “மாம்சம் புசிக்கக்கூடாது…எந்த மாமிசமும், மற்றும் ஓய்வுநாட்கள் போன்றவைகளைப் பற்றின பாரம்பரியங்களை கடைப்பிடிக்க விரும்பினான். அநேக நல்ல நபர்கள் இன்னமும் அதைப் போன்ற காரியங்களையே சார்ந்திருக்க முயற்சிக்கின்றனர். 134 ஒருநாள் அவன் மேல் வீட்டில் இருந்தபோது, அவன் ஒரு சத்தத்தைக் கேட்டான். அது, “நான் சுத்தமாக்கினதை நீ ‘அசுத்தம்’ என்று கூறாதே” என்று உரைத்தது. 135 தேவன் இங்கே இந்த பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கூட்ட பிரசங்கிமார்களை எடுத்து, நாம் பைத்தியக்காரர்கள் அல்ல, நாம் பரிசுத்த உருளைகள் அல்ல, ஒரு கூட்ட குப்பை அல்லவென்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்வாரானால் நலமாயிருக்கும் என்று நான் விரும்புகிறேன். அது ஜீவனுள்ள தேவனுடைய ஆவியாயிருக்கிறது. புருஷர்களும், ஸ்திரீகளும் அவருடைய நன்மையைப் பருகியிருக்கின்றனர். அது மந்திரவாதமோ அல்லது மனோதத்துவ மனோவசியமோ அல்ல. அது ஜீவனுள்ள தேவனுடைய ஆவியாய் இருக்கிறது. உங்கள் முன்னோர்களுடைய பாரம்பரியங்களை விட்டுவிட்டு, ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள். அது உங்களை மாற்றும். அப்பொழுது நீங்கள் துன்ப்பப்படுத்துகிறவர்களில் ஒருவராக மாறமாட்டீர்கள் நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க விரும்புவீர்கள். நீங்கள் அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக மிதக்கும் வரையில், உங்களால் உங்களுடைய எல்லாக் கோட்பாடுகளின் தடைகளையும் கடந்து செல்லக் கூடுமானால், அப்பொழுது ஏதோக் காரியம் சம்பவிக்கும். அப்பொழுது நீங்கள் அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்பதை விசுவாசிக்கமாட்டீர்கள். அவைகள் சரியாக இங்குள்ளன என்றே நீங்கள் விசுவாசிப்பீர்கள். ஏனென்றால் ஒரு மனிதனை மாற்றும்படியாக நிச்சயமாக உங்கள் பேரிலேயே ஒன்று நிகழ்த்தப்படும். அதைத்தான் தேவனுடைய சத்தம் எப்பொழுதும் செய்கிறது. அது புருஷர்களையும், ஸ்திரீகளையும் மாற்றி அவர்கள் இருக்க வேண்டியப் பிரகாரமாக அவர்களை உருவாக்குகிறது; வேத பாடசாலைகளும், வேத சாஸ்திரிகளும் உருவாக்கியிருக்கிறது போன்றில்லாமல், தேவன் அவர்களுக்காக என்ன மாதிரியை வைத்திருக்கிறாரோ அதன்படியே உருவாக்குகிறது. அந்தச் சத்தம் பேசுகிறதே! “நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன்”. 136 ஓ, நான் தனிப்பட்ட அனுபவங்களுக்காக செல்ல விரும்புகிறேன். நீங்கள் தனிப்பட்டச் சாட்சிகளைத் தெரிந்து கொள்ள எவ்வளவு விருப்பங்கொள்வீர்கள். உங்களில் அநேக புருஷர்களும், ஸ்திரீகளும் அவருடைய சத்தத்தைக் கேட்டிருக்கிறீர்கள். 137 நான் வெறுமனே ஒரு சிறு பையனாய் கென்டக்கி மலைகளில் இருந்தபோது அதைக் கேட்டதைக் குறித்து என்னால் நினைவுகூர முடிகிறது. அப்பொழுது நானோ அது ஒரு மரத்தில் அமர்ந்திருந்த ஒரு பறவையென்றே எண்ணினேன். ஆனால் அந்த பறவையோ பறந்து சென்றுவிட்டது. அப்பொழுது அவர், “பயப்படாதே, ஏனென்றால் நீங்கள் என்றோ ஒரு நாள் இங்கிருந்து செல்லப் போகிறீர்கள். நீங்கள் நியூ ஆல்பனி என்று அழைக்கப்படுகின்ற ஒரு பட்டிணத்திற்கு அருகில் குடியிருப்பீர்கள்” என்றார். அவர், “புகைக்காதே, குடிக்காதே, உன்னுடைய சரீரத்தை எந்த ஸ்திரீயுடனும் அசுசிப்படுத்திக் கொள்ளாதே. உனக்கு வயதாகும்போது நீ செய்ய வேண்டிய ஒரு ஊழியம் உண்டு” என்று கூறினபோது நான் அவருடைய சத்தத்தைக் கேட்டேன். 138 ஓ, அவர் இன்னமும் மாறாத தேவனாகிய கர்த்தராயிருக்கிறார். அவர் உங்களுடைய மிகச் சிறிய அறையில், உங்களுடைய ஜெப அறையில் உங்களிடத்தில் ஒவ்வொரு மணி நேரமும் பேசுவதை நீங்கள் கேட்கிறீர்கள். கூட்டத்தினருக்கு முன்பாக வெளியே வாருங்கள், அப்பொழுது காணும்படியாக ஜனங்களிடத்தில் பேசுவார். தேவனுடைய சத்தம், அது சாமுவேலின் நாட்களில் அபூர்வமாயிருந்தது. அது இன்றைக்கும் அதிக அபூர்வமாயிருக்கிறது ஏனென்றால் பிரத்தியட்சமான தரிசனம் இல்லாதிருந்தது. 139 பேதுரு அந்தச் சத்தத்தைக் கேட்டான். அது அவனுடைய முழு வேத சாஸ்திரத்தையும் மாற்றினது. அவன் நேராக புறஜாதியாரண்டைச் சென்றான். அவன் அவர்களோ ஒதுக்கப்பட்ட ஒரு கூட்ட கல்வியற்றவர்களாயிருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் தேவனுடைய சத்தம்: அவனுடைய போதனையல்ல. ஜீவனுள்ள தேவனுடைய சத்தமே அவனை மாற்றினது. 140 இப்பொழுது இன்னும் ஒன்று, வேதாகமத்தில் ஒரு சமயம் ஒரு நல்ல மனிதன் இருந்தான். இயேசுவோடு தனிப்பட்ட முறையில் அறிமுகமான ஒருவன், அவன் அவரை நேசித்து, அவரில் விசுவாசங்கொண்டு, அவரை ஆராதித்து, அவரோடு விளையாடி, அவரோடு மலைகளுக்குச் சென்று, ஆறுகளுக்குச் சென்று அவரோடு மீன்பிடித்தவன். அவன் ஒரு நல்ல மனிதனாய் இருந்தான். ஒருநாள் இயேசுவானவர் போய்விட்டபோது, மரணமானது அவனுடைய அறைக்குள்ளாக வந்து களவாடியது. 141 அவன் அந்தப் பண்டைய வைதீக சபையை விட்டு வெளியேறியிருந்தான். அவனும் அவனுடைய அன்பார்ந்த சகோதரிகளான மார்த்தாளும் மரியாளும் அதை விட்டுவிட்டிருந்தனர். அவர்கள் அவரை நேசித்த காரணத்தினால், அவர்கள் அதை விட்டு வெளியே வந்து, அவர் மேசியாவாயிருக்கத்தான் வேண்டும் என்று விசுவாசித்தனர். அவ்வாறு செய்தபடியால் சபையானது அவர்களை துரிதமாக சபை கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி வைத்திருந்தது. 142 இந்த வாலிபன் மிகவும் வியாதிப்பட்டு மரித்துப்போய் அடக்கம் பண்ணப்பட்டான். நான்கு நாட்கள் கடந்து விட்டன. அப்பொழுது வேத சாஸ்திரப் போதனைகள் என்ன நன்மையைச் செய்யும்? அப்பொழுது அவனுடைய சபை என்ன நன்மையைச் செய்யும்? ஆனால் அப்பொழுது தேவனுடைய சத்தம் பூமியின் மேலிருந்தது. அவர் லாசரண்டை பேசினார். லாசரு, மரித்துப்போய் கல்லறையில் அழுகிப்போயிருந்த ஒரு மனிதன், அவருடைய சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து மீண்டும் ஜீவித்தான். 143 நான் பாவத்திலும், அக்கிரமங்களிலும் ஒரு காலத்தில் மரித்துப் போயிருந்தேன். நீங்கள் பாவத்திலும், அக்கிரமங்களிலும் மரித்துப் போயிருந்தீர்கள். ஆனால் தேவனுடைய சத்தமோ, “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்களே எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றுரைத்தது. 144 நான் அந்த சத்தம் முடமானவனிடத்தில் பேசி, அவனை நேராக்கினதைப் பார்த்திருக்கிறேன். நான் தேவனுடைய சத்தம் குருடனண்டைப் பேசி, அவனுடைய கண்களைத் திறந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். மரிப்பவர்களும், புற்று நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குஷ்டரோகிகளும், மீண்டும் பரிபூரண ஆரோக்கியத்தோடு அவர்கள் நல்ல சரீரத்திற்கு திரும்புவதை நான் காண்கிறேன். அவர் குடிகாரர்களிடத்திலும், நரம்புத் தளச்சியுற்றவர்களிடத்திலும், ஒதுக்கப்பட்டவர்களிடத்திலும், சிறைச்சாலைக்கு அனுப்பப்படக்கூடியப் சோம்பேறித் தெருச்சுற்றிகளிடத்தில் பேசினதையும், அதன்பின்னர் அவர்கள் பெருந்தகையோராய், ஜீவனுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களாய், பெண்மணிகளாய் மாறினதையும் நான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் தேவனுடைய சத்தம் பேசினது. அதற்குத்தான் இன்றைக்கு நாம் செவிகொடுக்கிறோம். 145 நான் இதை முடிவாக கூறுவேனாக. உங்களுடைய விலையேறப்பெற்ற ஆத்துமா உங்களுடைய சரீரத்தைவிட்டு எடுக்கப்பட்டு, அது சேரவேண்டிய அதனுடைய ஸ்தலத்திற்கு செல்லும் ஒரு நேரம் வரும். அப்பொழுது அது ஒன்று அப்பாலுள்ள அந்தகாரத்திற்குள்ளாக அலைந்து கொண்டிருக்கும் அல்லது தேவனுடைய மடிக்குள்ளாகச் செல்லும். அந்தச் சத்தம் மீண்டும் பேசும். வேதமோ, “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள். சிலர் நித்திய நிந்தைக்கும், இகழ்ச்சிக்கும் எழுந்து வருவார்கள். மற்றவர்களோ நித்திய சமாதானத்திற்கும், மகிழ்ச்சிக்கும் எழுந்து வருவார்கள்” என்று கூறியுள்ளது. 146 நீங்கள் தொலைக்காட்சி என்னக் கூறுகிறதோ அதற்குச் செவிகொடுக்கப்போகிறீர்களா அல்லது செய்தித்தாள் என்னக் கூறுகிறதோ அல்லது வேதப்பண்டிதர்கள் என்னக் கூறுகிறார்களோ அல்லது தேவன் என்னக் கூறுகிறாரோ அதற்கு செவிகொடுக்கப்போகிறீர்களா என்பதை உங்களுடைய சிந்தையில் தீர்மானம் செய்யும் நேரமாக இக்காலை இருக்கலாம். ஜனங்களாகிய உங்களுக்கு நான் இதைக் கூறட்டும். தேவன் என்னக் கூறுகிறாரோ அதைத்தவிர வேறெந்த காரியம் என்னக் கூறினாலும் செவிகொடுக்காதீர்கள். அந்த அமர்ந்த மெல்லிய சத்தத்தின் பேரிலேயே காத்திருங்கள். அப்பொழுது அவர் உங்களை மாற்றுவார். 147 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், நான் விசுவாசிக்க விரும்புகிறேன். என்னால் விசுவாசிக்கக் கூடும் என்று நான் ஆவல் கொள்கிறேன். என்னால் குறிப்பிட்ட காரியங்களைச் செய்ய முடியும் என்று நான் ஆவலுறுகிறேன்” என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்களால் முடியாது, ஏன்? நீங்கள் போதுமான அளவு அமைதியாயிருக்கிறதில்லை. சந்தேகங்கள் யாவும் அற்றுப்போகின்ற ஓர் இடத்திற்குள்ளாக நீங்கள் செல்லுகிறதில்லை. 148 நீங்கள் சந்தேகங்கள் கடந்து போயிருக்கின்ற ஸ்தலத்திற்குள்ளாக பிரவேசிக்கும்போது, நீங்கள் சுயாதீனமாயிருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் தேவனுடைய சத்தம் பேசுகிறதைக் கேட்க முடியும். “என்னுடைய பிள்ளையே, நான் உன்னுடைய இரட்சகர், என்னுடைய பிள்ளையே, நான் உன்னுடைய சுகமளிப்பவர். நீ இந்தக் காரியங்களை செய்ய வேண்டியதில்லை. நீ விடுதலையாகும்படி நான் மரித்தேன். ஆனால் நீ இந்த அதிர்வில், இந்த எல்லாவிதமான சத்தங்களோடும் இங்கு கலந்திருக்கும் வரையில், அவை எல்லாவற்றிலிருந்தும் வெளியேறு”. 149 ஒருமுறை நான் மேலே மலைகளில் இருந்த ஒரு நேரம் எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் அந்த அனுபவங்களை ஒருபோதும் மறவேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது இன்னும் சற்று அதிகமாக இருக்கலாம். அப்பொழுது நான் திரு.ஜெப்பரிஸ் (Jefferies) அவர்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்காகச் சுற்றி வளைத்து ஒன்றுதிரட்ட உதவி செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அவர்கள் குதிரைகளின் மேல் உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்திருந்தனர். அவர்களை கால்நடைகள் வரும்படி அறிந்துகொள்ளும்படியாக அந்த மூட்டைகளை ஒரு குறிப்பிட்ட உப்பளங்கள் உள்ள இடங்களில் இறக்கி வைக்கும்படிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அது ஏறக்குறைய ஜனக்குடியிருப்பிலிருந்து எழுபது மைல் தூரத்தில் இருக்கும். இல்லையென்றால் நான் குறிப்பிட்டுக் கூறுவது சுமார் முப்பது மைல், முப்பத்தைந்து, ஒருக்கால் கொலரோடாவில் உள்ள கிரிம்லிங் என்ற இடத்திற்கு அங்கிருந்து நாற்பது மைல் இருக்கலாம். அதாவது அங்கிருந்து எழுநூறு அல்லது எண்ணூறு பேர்கள் கொண்ட ஜனத்தொகை உள்ள ஒரு பட்டணத்திற்கு நீங்கள் செல்லலாம். நான் என்னுடைய குதிரையை வைத்திருந்தேன். பின்னர் நான் குதிரைச் சேணத்துடன் இணைந்த சோடிப்பைகளை குதிரையை விட்டு இறக்கிவிட்டேன். நாங்கள் இரட்டை தூரதரிசினிக் கண்ணாடியினூடாக கால்நடைகளைப் பார்த்தோம். நான் என்னுடைய குதிரையை ஒரு பெரும் மரக்கிளையில் கட்டியிருந்தேன். குதிரைக்குப் பின்னே குடியிருப்பு வண்டிகள் இருந்தன. குதிரையோ முன்னால் இருந்தது. நான் மலைகளுக்கு மேலே சென்றேன். அது மிகவும் அழகாயிருந்தது. அது இளவேனிற் பருவமாயிருந்தது. அப்பொழுது நான் பள்ளத்தாக்கினூடாக நோக்கிப் பார்த்துக் கொண்டு, தூரத்தில் இருந்த தண்ணீரின் சிற்றலைகளை கவனித்துக் கொண்டிருந்தேன். நான் அவைகளைக் கவனித்தபோது, அது நடுபிற்பகலாயிருந்தது. அப்பொழுது ஏதோக் காரியம் என்னை அதிர்வுறச் செய்ததைக் கண்டேன். 150 ஒரு வயதான தாய் கழுகுப் பறவையானது அதனுடைய கூட்டிலிருந்து தன்னுடைய குஞ்சுகளை எடுப்பதைக் கண்டேன். அது அவைகளைத் தன்னுடைய இறக்கைகளின் மேல் ஏற்றிக்கொண்டு சிறகடித்துப் பறந்தது. இதற்கு முன்பு அவைகள் கூட்டிலிருந்து வெளியே சென்றதேயில்லை. ஆனால் அது அவைகளைப் பள்ளத்தாக்கிற்கு கொண்டு சென்றது. அவைகள் இதற்கு முன்பு ஒருபோதும் கீழே வந்ததேயில்லை. அவைகள் பறக்க கற்றுக் கொண்டிருந்தன. ஆகையால் அது அவைகளை கீழே இறக்கி விட்டது. அவைகள் நெடுக ஓடி, புற்களைக் கொத்திக்கொண்டு, ஒன்றன்மீது ஒன்று தடுக்கி விழுந்து கொண்டு, அவைகளால் எந்தளவு கவலையற்றதாக இருக்க முடிந்ததோ அவ்வளவு கவலையற்றிருந்தன. நான் அங்கு அமர்ந்திருக்கையில், “இப்பொழுது இது உண்மையான ஒரு கூட்ட விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களைப் போன்றிருக்கவில்லையா? அவைகள் கவலையற்றவைகளாக இருக்கின்றதே” என எண்ணினேன். அவைகள் ஏன் கவலையற்றிருந்தன? அவைகள் எந்த காரியத்திற்குமே பயப்படவில்லை. ஏனென்றால் தாய்க்குழு அவைகளைக் கவனிக்கும்படிப் பின்னாக மேலே பறந்து சென்று ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்தது. ஓ, அதுவே இதனை அவ்வளாவாய் மாற்றுகிறது. 151 நீங்கள், “நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள நேர்ந்தால், போதகர் இன்னார்—இன்னார் என்ன சொல்வார்? பேராயர் இன்னார்—இன்னார் என்ன சொல்லுவார்?” என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் என்னக் கூறினாலும் நான் கவலைப்படுகிறதில்லை. 152 இயேசுவானவர் மரித்தார். அவர் மகிமையின் கொத்தளங்களில் ஏறியிருக்கிறார். அவர் வானாதி வானங்களில் உட்கார்ந்திருக்கிறார். உங்களை ஒன்றுமே தொல்லைப்படுத்தப் போகிறதில்லை. அவருடைய கண்கள் அடைக்கலான் குருவியின் மேல் இருக்கின்றன. அவர் என்னைக் கவனிக்கிறார் என்பதை நான் அறிவேன். அவர் உங்களையும் கவனிக்கிறார். 153 அப்பொழுது ஒரு ஓநாயோ அல்லது வேறெதோ ஒன்று இந்தச் சிறிய குஞ்சுகளில் ஒன்றைத் தொல்லைப்படுத்த வருமேயானால், ஏன்? அந்தத் தாய்…அவைகள் கவனமில்லாதிருக்கலாம். ஆனால் அந்தத் தாய்க்கழுகு அந்த ஓநாயை கொத்தி தன்னுடைய பாதங்களில் இறுக்கி தூக்கிக் கொண்டு ஏறக்குறைய பல்லாயிரக்கணக்கான அடிகள் தூரம் உயரக் கொண்டு சென்று, அங்கிருந்து அதை கீழே போடும். அப்பொழுது அது ஆகாயத்திலேயே சிதைந்துபோகும். அந்த சிறிய குஞ்சுகளை ஒன்றுமே தொல்லைப்படுத்தப் போகிறதில்லை. ஏனென்றால் தாய் அதைப் பார்த்துக் கொண்டே இருக்கப்போகிறது. 154 உங்களை எதுவுமே தொல்லைப்படுத்தப் போகிறதில்லை. தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ள பயப்படாதீர்கள். சற்று இளைப்பாறும்படி ஓய்ந்திருங்கள். விசுவாசமுடையவர்களாயிருங்கள, விசுவாசியுங்கள். அவர் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். உங்களைத் தொல்லைப்படுத்த முயற்சிக்கும் எந்தக் காரியத்தையும் அவர் சிதைத்து விடுவார். ஓ, அது உங்களைத் தாக்கலாம். ஆனால் அது உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது. “சகல காரியங்களும்”, அவர் அதை அனுமதிக்கிறார். அது வேறொன்றுமாய் இருக்க முடியாது. “ஏனென்றால் கர்த்தரிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது”. எந்தத் தீங்கும் உங்களண்டை வர இயலாது. 155 ஆகவே கொஞ்சம் கழித்துப் புயல் வந்தது. புயல் உருவாகத் துவங்கினபோது, அது துரிதமாக வந்தபோது, அந்த வடக்காற்று மின்னல்களோடு மணிக்கு அறுபது அல்லது எழுபது மைல் வேகத்தில் வீசத்துவங்கினது. அப்பொழுது அந்தத் தாய்க் கழுகு கம்பீரமான ஒரு பெரியச் சத்தமிட்டு, கீழே பள்ளத்தாக்கினூடாகச் சென்றது. அந்தக் கூக்குரல், அது என்ன செய்தது? அந்தக் கழுகுக்குஞ்சுகள் தங்கள் தாயினுடைய சத்தத்தை அறிந்து கொண்டன. அவர், “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன” என்றார். 156 அபாயம் அருகிலிருந்தது. இப்பொழுது அவைகள் கெட்டியான கற்துண்டுகளின் கீழே செல்ல முயற்சிக்கவில்லை. அவைகள் ஏதொ ஒருவிதமான குப்பைக்குள்ளாக ஓட முயற்சிக்கவில்லை. அவைகள் அப்படியே தாய்க்காகக் காத்திருந்தன. 157 அதைத்தான் கிறிஸ்தவனும் செய்ய வேண்டும். அதைக் குறித்து தேவன் என்ன செய்யப் போகிறார் என்று பாருங்கள். 158 அந்த தாய்க்கழுகு தரையிறங்கினபோது, அதினுடைய மகத்தான, பெரிய பாதத்தை இந்தவிதமாக வைத்தது. அது ஒரு மகத்தான, மிகப்பெரிய ஆகாயவிமானம் கீழே இறங்கியது போன்றுச் செட்டைகளை விரித்து கீழே இறங்கியது. அது தன்னுடைய தலையை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி, கூச்சலிட்டது. அது அந்த பெரிய சிறகுகளை, ஏறக்குறைய ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை இந்தக் கம்பிலிருந்து அந்தக் கம்பு வரையிலான பதினான்கு அடிகள் அகன்ற செட்டைகளை விரித்தன. அந்த எல்லா கழுகுக் குஞ்சுகளும் அவைகளால் முடிந்த அளவு கடினப்பட்டு ஓடி, தங்களுடைய தாயின் செட்டைகளின் மேல் குதித்து ஏறிக்கொண்டன. அவைகள் தாயினண்டை சென்றடைந்தபோது தங்களுடைய சிறிய பாதங்களால் சிறகைப் பற்றி, தங்களுடைய அலகுகளால் அதைக் கொத்திப் பற்றிக் கொண்டு, அந்த உறுதியான சிறகுகளை அவைகள் ஒவ்வொன்றும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டன. தாய்க் கழுகோ அவைகளை ஏற்றிக்கொண்டு அந்தச் செட்டைகளில் ஒரு அதிர்வுமின்றி, அந்தக் காற்றிற்குள்ளாக எழும்பினது. அந்தத் தாய்க் கழுகு வந்து கொண்டிருந்த புயலிலிருந்து அவைகளை மறைக்கும்படிக்கு நேராக அந்தக் கன்மலைக்குள்ளாக பறந்து சென்றது. 159 ஓ, சகோதரனே, புயலானது சமீபித்திருக்கிறது. அவருடைய சத்தத்திற்கு செவிகொடுங்கள். அது உங்களை, “பாபிலோனிலிருந்து வெளியே வாருங்கள், வேறு பிரித்துக் கொள்ளுங்கள். அவனுடைய, அவர்களுடையப் பாவங்களுக்கு உடன்படாதீர்கள். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன். நீங்கள் எனக்குக் குமாரரும், குமாரத்திகளுமாயிருப்பீர்கள். நான் உங்களுக்குத் தேவனாயிருப்பேன்” என்று அழைக்கிறது. நாம் முடிக்கையில் அப்படியே ஒரு கணம் நம்முடையத் தலைகளைத் தாழ்த்துவோமாக. 160 [யாரோ ஒருவர் ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.—ஆசி.] ஆமென். நீங்கள் அதைக் கேட்டீர்கள். அதைத்தான் நாம் சபையில் தீர்க்கதரிசனம் என்று அழைக்கிறோம். 161 இக்காலை இங்கு யாராவது, “தேவனாகிய கர்த்தாவே, என்னிடத்தில் இரக்கமாயிரும். நான் சபையைச் சேர்ந்திருந்தாலும் நான் ஒரு அறிக்கையை செய்திருக்கிறேன். ஆனால் நான் உமக்கு முன்பாக அமைதியைப் பெறுவது எப்படி என்பதையும் அறியேன். உம்முடைய சத்தம் என்னை வழிநடத்துகிறதையும், எனக்குப் போதிப்பதையும் நான் கேட்பேனாக. நீர் என்னிடத்தில் கேட்கக்கூடியச் சத்தத்தில் பேச வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும் என்பதை நான் அறியேன். நான் உம்மை அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆகவே நீர் என்னிடத்தில் பேசி, என்னுடையப் பாதைகளுக்கு வழிகாட்ட முடியுமா?” என்று கூறுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொள்ளும்படி கூறுவீர்களா? நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தி, “தேவனே, இரக்கமாயிரும்” என்று கூறுவீர்களா? கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. எங்கும், எங்கும் கரங்கள் காணப்படுகின்றன. அப்படியே தொடர்ந்து உயர்த்தியிருங்கள். அது சரி, “கர்த்தாவே, என்னிடத்தில் இரக்கமாயிரும். நீரே எனக்கு மிக அதிகம் தேவை”. முடிப்பதற்குச் சற்று முன்னர் இன்னும் வேறு யாராவது இருக்கிறார்களா? தேவன் அங்கே பின்னால் உள்ள உங்களுடைய கரங்களைக் காண்கிறார். பெண்மணியே, பின்னாக உள்ள எல்லோரையும், வரிசையில் நின்று கொண்டிருப்பவர்களையும் காண்கிறார். தேவன் மேடையண்டையிலும்கூட, இங்கே மேலே சுற்றிலும் உள்ள உங்களையும் காண்கிறார். சாமுவேல், “ஏலி, நீர் என்னைக் கூப்பிட்டீரா?” என்று கேட்டான். அதற்கு ஏலி, “இல்லை, என் மகனே, நான் ஒருபோதும் உன்னைக் கூப்பிடவில்லையே” என்றான். 162 நண்பனே, உங்களுடைய இருதயத்தில் பேசினது நானல்ல. அது தேவனாகும். அப்படியே திரும்பிப் பேசி, “உம்முடைய அடியேன் கேட்கிறேன். தேவனே என்னை உம்முடைய பாதுகாப்பில் எடுத்துக் கொள்ளும். இந்நாள் முதற்கொண்டு நான் முற்றிலும் உம்முடையவனாயிருப்பேனாக” என்று கூறுங்கள். 163 நித்திய தேவனே, ஆத்துமாவின் நேசரே, எல்லாக் காரியங்களையும் சிருஷ்டித்தவரே, சாமுவேலிடத்தில் பேசின, சவுலினிடத்தில் பேசின, பேதுருவினிடத்தில் பேசின, தானியேலினிடத்தில் பேசின, ஏசாயா தீர்க்கதரிசியினிடத்தில் பேசின, எல்லாக் காலங்களினூடாகவும் பேசின அந்த அமர்ந்த மெல்லிய தேவனுடைய சத்தம் மீண்டும் இந்தக் காலையில் கூடாரத்தில் பேசியிருக்கிறது. ஒரு வேளை முப்பது அல்லது நாற்பது அல்லது ஒருக்கால் ஐம்பது கரங்கள் இருக்கலாம். பாவிகளும், சபை அங்கத்தினர்களும், ஏமாற்றங்களோடுள்ள ஜனங்களும் தங்களுடையக் கரங்களை உயர்த்தினர். அவர்களில் அநேகர் கடந்த இரவு இங்கிருந்தனர். அவர்கள் கேட்கக்கூடியதாய் வருகிற உம்முடைய சத்தத்தைக் கேட்டனர். இப்பொழுது இந்தக் காலையில் அதே சத்தம் அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் பேசுகிறது. அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். தங்களுடைய கரங்களை பரலோகத்தை நோக்கியவாறு உயர்த்தியிருப்பதோடு, அவர்கள் தவறாயிருக்கிறார்கள் என்றும், அவர்கள் சரியாயிருக்க வேண்டுமென்றும் விரும்புகின்றனர் என்றும் கூறுகிறார்கள். 164 நீர் உம்முடைய வார்த்தையில், “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வர மாட்டான். என்னிடத்தில் வருகிற யாவருக்கும், நான் நித்திய ஜீவனை அவர்களுக்கு அளிப்பேன். கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்” என்று கூறியிருக்கிறீர். 165 பிதாவே, நீர் அதை வாக்குப்பண்ணினீர். இப்பொழுது உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிற இவர்களுக்கு நித்திய ஜீவனையும், நித்திய சந்தோஷத்தையும் தரும்படி நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறோம். அவர்கள் தங்களுடைய ஜீவியக்காலம் முழுவதும் உமக்காக ஜீவிப்பார்களாக. ஜீவியப் பயணத்தின் பாதையின் முடிவில் கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பார்களாக. பிதாவே இதை அருளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நிமித்தமாக வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 166 எத்தனை பேர்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு அப்படியே உங்களுடைய முழு இருதயத்தோடு அவரை நேசிக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இப்பொழுது இதைப் போன்ற இந்தச் சிறு இடங்களுக்கு இங்கே நான் சற்று காலதாமதமாக வருகிறேன். ஆனால் வேதம், “நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களில் வீற்றிருக்கிறோம்” என்று கூறியுள்ளது. பரிசுத்த ஆவியானவர் வந்து, வார்த்தைக்குள்ளாகச் சென்று, கூட்டத்தாரினூடாக அசைவாடுகிறதையும், அது அவர்களின் மீது துடைத்தெடுத்து அவர்களை மாற்றுகிறதை உங்களால் கவனித்துப் பார்க்க முடியும். 167 நான் கூறியுள்ளதுபோலவே நான் உணர்ச்சிகளில் நம்பிக்கை கொண்டுள்ளேன். நிச்சயமாக. ஆனால் நீங்கள், என்ன…பாருங்கள் உணர்ச்சிகள் உங்களை மாற்றுகிறதில்லை. உணர்ச்சிகள் உங்களுடைய சரீரத்தின் உணர்வுகளை தூண்டும்படியாக அதனைத் தொடும் வரைக்குமே செல்ல வேண்டியதாயிருக்கிறது. பாவமுள்ள காரியத்திலிருந்து உங்களை மாற்றுகிறதோ… 168 ஒரு பாவி என்றால் என்ன? அவிசுவாசி. இன்றைக்கு அநேக நபர்கள் ஒரு இளங்கலை பட்டத்தையும், ஒரு முனைவர் பட்டத்தையும், தத்துவ ஆராய்ச்சி பட்டத்தையும் இரட்டை சட்ட தத்துவ ஆராய்ச்சிப் பட்டங்களைத் தங்களுடைய பெயர்களோடு இணைத்துக் கொண்டு இன்னமும் பாவிகளாயிருக்கிறார்கள். வேதாகமத்தை ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை அறிந்து, பிரசங்கப்பீடத்திலிருந்து இன்னமும் அவிசுவாசிகளாயிருக்கிறார்கள். வேதம், “விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டாயிற்று” என்று கூறியுள்ளது. 169 அவர்கள் இந்நாளுக்கான பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறார்களா என்று அந்த ஜனங்களில் ஒருவரிடத்தில் கேட்டுப் பாருங்கள். “ஏன் நிச்சயமாக இல்லை. தெய்வீக சுகமளித்தல் உண்டு என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஏன்? நிச்சயமாக இல்லை” அப்படியானால் அவன் ஒரு அவிசுவாசியாயிருக்கிறான். அது உண்மை. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருப்பாரேயானால், அவர் தம்முடைய சொந்த வார்த்தைக்கு சாட்சி பகரமாட்டாரா? தேவன் கூறுகிறது உண்மையாயிருக்கிறது என்பதற்கு முரண்பாடாக உங்களுக்குள் இருக்கும் ஆவியானது சாட்சிப் பகருமேயானால், அது கிறிஸ்துவின் ஆவியல்ல. நீங்கள் கிறிஸ்துவின் சபையைச் சார்ந்திருக்கலாம், ஆனால் தேவன் உண்டுபண்ணின ஒவ்வொரு வாக்குத்தத்திற்கும் உங்களுடைய ஆவி “ஆமென்” என்று கூறுகிற வரையிலும் நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் அல்ல. அவர் வாக்களித்தப்போது… 170 பேதுரு பெந்தேகோஸ்தே நாளில் கூறினான், அவன், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்றான். உங்களுடைய ஆவியோ அது வேறொரு நாளுக்கானது என்று கூறுமேயானால்…வேதம் என்ன கூறினது? “வாக்குத்தத்தமானது உங்களுக்கும்” யூதர்கள், “உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும்” புறஜாதிகள், “உண்டாயிருக்கிறது”. அதே வாக்குத்தத்தம். 171 அவர், “நான் திராட்சைச் செடி, நீங்கள் கொடிகளாயிருக்கிறீர்கள்” என்றார். அது உபதேசத்தின் கொடியாயிருக்குமானால், முதலாம் கொடியும், இரண்டாம் கொடியும் ஒரே உபதேசத்தை உடையதாயிருக்க வேண்டும். அதே உபதேசம் அதே பலன்களை உற்பத்தி செய்யும். திராட்சைச் செடியிலிருந்து ஒவ்வொரு கொடியும் தோன்றுகிறபோது, அது அதேக் காரியத்தையே உற்பத்தி செய்யும். நான் இந்தக் காலையில் மகிழ்ச்சியாயிருக்கிறேன். ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானது இன்னமும் ஜனங்களிடத்தில் பேசுகிறதையும், உரையாடுகிறதையும், அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துகிறதையும் நான் அறிந்திருக்கிறேன் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சிடைகிறேன். 172 நாம் இன்னும் ஒரு சில நிமிடங்களில் அப்படியே ஞானஸ்நான ஆராதனைக்குள்ளாகச் செல்லப்போகிறோம். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி வேறெந்த வழியிலாவது தெளிக்கப்பட்டோ, ஊற்றப்பட்டோ அல்லது முழுக்கப்பட்டோ இருந்திருந்தால், நீங்கள் தண்ணீரண்டைக்கு வரும்படிச் சவாலிடப்படுகின்றீர்கள். 173 இப்பொழுது நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், நீர் என்னை பொருட்படுத்திக் கூறுகிறீரா” என்று கேட்கலாம். ஆம், சகோதரனே. 174 தெளித்தல் வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கவில்லை. வேதாகமத்தில் எவராவது, எப்போதாவது தெளிக்கப்பட்டார்கள் என்று எந்த இடத்திலுமே இல்லை. இப்பொழுது இதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நான் வாரம் முழுவதும் இந்த மேஜையிலிருந்து கேட்டிருக்கிறேன். வேதாகமத்தில் எந்த ஒரு நபராவது எப்போதாவது அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காகத் தெளிக்கப்பட்டார்கள் என்றோ, அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக ஊற்றப்பட்டார்கள் என்றோ அல்லது அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக, “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர் என்றோ நான் கண்டறியட்டும். முழு வேதாகமத்திலுமே, எந்த ஒரு நபரும் எப்போதுமே தெளிக்கப்படவோ, ஊற்றப்படவோ அல்லது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவோ இல்லை.” இல்லை ஐயா. அவர்கள்… 175 ஒரு சமயம் சில ஜனங்கள் யோவான் ஸ்நானகனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். அவர்கள் எந்த நாமத்தினாலுமே ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே மனிதனால் அவர்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தனர். ஆனால் பவுல், அவன் அவர்களை அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் சந்தித்தபோது, அவர்கள் மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படும்படி வரவேண்டும் என்று அவர்களுக்குக் கூறினான். ஏனென்றால், அவர்கள் அதுவரை பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 176 சிலர் ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கு முன்னரே பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனர் என்று பேதுரு கண்டபோது, அவர்கள் இயேசு கிறிஸ்துன் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படும்வரையில் அவர்களோடு தரித்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அவன் கட்டளையிட்டான். நண்பனே, அது உண்மை. 177 அநேக ஜனங்கள், “இப்பொழுது சகோதரன் பிரான்ஹாம் இயேசு மாத்திரமே என்ற குழுவினைச் சார்ந்தவர்” என்று கூறுகின்றனர் என்பதை நான் அறிவேன். அது தவறாகும். 178 நான் அப்படியே வேத வாக்கியங்களை விசுவாசிக்கிறேன். நான் எந்த ஒரு ஸ்தாபனத்தையும் சார்ந்திருக்கவில்லை. இயேசு மாத்திரமே என்ற பிரிவினர் எப்படியும் அந்தவிதமாக ஞானஸ்நானம் கொடுக்கிறதில்லை. அவர்கள் வெறுமனே “இயேசு” வின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். வேதமோ, “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து” என்று கூறியுள்ளது. அநேக இயேசுக்கள் இருந்தனர். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. புரிகின்றதா? பார்த்தீர்களா? கிறிஸ்து மேசியாவாயிருக்கிறார். புரிகின்றதா? அது உண்மை. 179 இப்பொழுது நண்பர்களே, இப்பொழுது இந்தக் காலையில் இங்குள்ள நீங்கள், நீங்கள் ஒருபோதும் அந்தவிதமாக ஞானஸ்நானம் பண்ணப்படாமலிருந்தால் தேவனுடைய அமர்ந்த மெல்லியச் சத்தம் உங்களுடைய ஆத்துமாவின் ஆழத்தில் பேசுவதாக. பேராயர் என்ன கூறுகிறார்? சபை என்னக் கூறுகிறது? மற்ற வேறெந்தக் காரியம் என்னக் கூறுகிறது? என்று பொருட்படுத்தாமல் வந்து கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள் என்பதே உங்களுக்கான என்னுடைய கட்டளையாயிருக்கிறது. 180 இப்பொழுது சகோதரன் நெவில் ஞானஸ்நான ஆராதானைக்காக ஆயத்தம் செய்ய இந்த அறைக்குச் செல்வார். மற்ற காரியங்களை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறவர்களும் மூப்பர்களில் சிலரும் என்னோடு வாருங்கள், இன்னும் ஒரு நிமிடத்தில் நான் அங்கே உங்களோடிருப்பேன். 181 ஆனால் நாங்கள், “நான் என் இரட்சகர் அழைப்பதைக் கேட்க முடிகிறது” என்று பாடப்போகும்போது, இப்பொழுது வரப்போகின்றவர்கள் வரும்படி விரும்புகிறேன். “நான் அவருடன் செல்வேன். சபை என்னக் கூறினாலும் பொருட்படுத்தாமல் நான் அவருடன் செல்வேன். எவர் என்னக் கூறினாலும் நான் வழி நெடுக அவரோடு செல்வேன்”. இப்பொழுது நாம் பாடுகையில், ஆண்கள் இந்த அறைக்கு அவர்களுடைய வழியில் செல்லட்டும். ஸ்திரீகள் இந்த அறைக்கு அவர்களுடைய வழியில் செல்லட்டும். அதன் பின்னர் நாம் இன்னும் சற்று நேரத்திற்குள் முறைப்படி கலைந்து செல்லப் போகிறோம். சரி இப்பொழுது யாவரும் சேர்ந்து பாடுவோம். நான் என்னுடைய இரட்சகர் அழைப்பதைக் கேட்க முடிகிறது. 182 இப்பொழுது, ஆண்கள் இங்கே போகிறார்கள், ஸ்திரீகள் அங்கே போகிறார்கள். “என்னுடைய இரட்…”, தயவுசெய்து இங்குள்ள ஸ்திரீகளில் சிலர் இந்த ஸ்திரீகளோடு செல்லுங்கள். நான் என் இரட்சகர் அழைப்பதை கேட்க முடிகிறது…(நீங்கள் எதைக் கேட்டீர்கள்? அவருடைய சத்தம்) “என்னுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு பின்பற்றி வா, என்னைப் பின்பற்றி வா”. அவர் எங்கே…(இப்பொழுது நீங்கள் அதை உண்மையாகவே பொருட்படுத்தி கூறுகிறீர்களா?)…நான் பின் செல்வேன். அவர் எங்கே என்னை நடத்துகிறாரோ அங்கு நான் பின்செல்வேன், அவர் என்னை எங்கே நடத்துகிறாரோ அங்கு நான் பின்செல்வேன். நான் அவருடன் செல்வேன், வழி நெடுக அவரோடு செல்வேன். 183 இப்பொழுது நண்பனே, நான் இதைக் கூறுகிறேன், நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அந்தச் சத்தம் தேவனுடைய சத்தத்தின்படி பேசவில்லையென்றால், இதோ அது தவறானச் சத்தமாயிருக்கிறது. ஆனால், “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன”. 184 உங்களால் எப்படி வரமுடியும்? நீங்கள் வர இங்கு காரணம் உள்ளது. காரணமென்னவெனில், “உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவப்புத்தகத்தில் உங்களுடைய பெயர் எழுதப்பட்டிருந்தது”. வேதம் அவ்வண்ணமாகக் கூறியுள்ளது. இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற ஒரு நபரைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், அது சுவிசேஷ சத்தியமாயிருக்கிறது என்பதை அறிந்து அதே சமயத்தில் அவர்களை ஏதோ ஒன்று பிடித்துக் கொண்டிருக்குமேயானால், அப்பொழுது ஒருவேளை, அவர்களுடைய பெயர்கள் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் ஜீவபுத்தகத்தில் எழுதப்படவில்லை என்பதை அறிந்து கொள்கிறோம். அப்படியானால் என்ன? “அவர்கள் எனக்கு வீணாய் ஆராதனை செய்கிறார்கள்” பாருங்கள். “வீணாய்” 185 “ஓ”, நீங்களோ, “நான் ஒரு விசுவாசமுள்ள மனிதன். நான் ஒரு விசுவாசமுள்ள…” என்று கூறலாம். அதற்கு இதனோடு எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. 186 “மனுஷனுடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, அவர்கள் வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்.” 187 வேதாகமத்தில் எவருமே “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் தெளிக்கப்பட்டோ அல்லது ஊற்றப்பட்டோ ஞானஸ்நானம் பண்ணப்படவில்லையென்று நான் உங்களுக்கு கூறியிருக்கிறேன். அதை ஆராய்ந்துப் பாருங்கள், அதைக் கண்டறியுங்கள். அது அவ்வாறு இருந்தால் இன்றிரவே மேடையின் மீது வந்து என்னிடத்தில் காண்பியுங்கள். அப்படியிருந்தும் நீங்கள் அந்தவிதமாகவேச் செய்து வருவீர்களேயானால், அப்பொழுது நீங்கள் மனுஷருடைய பாரம்பரியத்தையே பின்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். 188 யாரோ ஒருவர் உங்களிடத்தில், “நல்லது, நீங்கள் வந்து, உங்களுடையப் பாவ அறிக்கையைச் செய்வீர்களேயானால் அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்று கூறுவாரேயானால் அது தவறாகும். அது மனிதனால் உண்டாக்கப்பட்ட உபதேசமாயிருக்கிறது. 189 ஒரு போலியான தண்ணீர் ஞானஸ்நானம் ஒன்று உண்டு. போலியான பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஒன்று உண்டு. பிசாசு பக்தியுள்ளவனாயிருக்கிறபடியால், அவன் அதைப் போலியாக பாவனைச் செய்கிறான். காயீன், அவனுடையத் தகப்பன் பக்தியானவனாயிருந்தான். நாம் அதனூடாகப் பார்த்து வந்திருக்கிறோம். சர்ப்பத்தின் வித்து இன்னமும் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது. ஸ்திரீயின் வித்தும் கிறிஸ்துவினூடாக இன்னும் தொடர்ந்து வருகிறது. “ஆனால் என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” 190 நீங்கள் வேதாகமத்தின்படியில்லாமல் ஒரு மனிதனுடைய கோட்பாட்டில் தவறாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள் என்றும், உங்களுடைய முதல் பிறப்பின் அறிக்கையே தவறாயிருக்கிறது என்பதையும் அறிந்தவர்களாய் இக்காலையில் இங்கே அமர்ந்துள்ள சிலர் இதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் திரும்பிப் போய்ச் சரியாகத் துவங்கினாலொழிய நீங்கள் எப்படிச் சரியாக இருக்க முடியும்? ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லையே என்று இந்த வாரம் நான் பிரசங்கித்திருக்கிறதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். 191 இப்பொழுது நீங்கள் உங்களிடத்தில் பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்க முடிந்தால் நலமாயிருக்கும். அது தேவனாயிருக்கிறது. ஏனென்றால் அது வேதத்தோடு இசைந்து செல்கிறது. அது இசைந்து செல்லவில்லையென்றால் அப்பொழுது ஏதோ ஒருவிதமான ஒரு தவறான சத்தம் உங்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் சரியானச் சத்தமோ எந்தத் தெளித்தலையோ, ஊற்றுதலையோ, தவறானதையோ பின்பற்ற அனுமதியாமல், உங்களை வேதாகமத்தின் விதிமுறைகளையே பின்பற்ற அனுமதிக்கும். நேராக வந்து வேதாகமத்தின் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். 192 நண்பர்களே, ஒவ்வொரு காரியத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பீர்களேயானால், அதைச் செய்யுங்கள். அதற்கு எதை இழக்க வேண்டியிருந்தாலும் நான் கவலைப்படாமல், நான் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்ற ஒவ்வொரு காரியத்தையும் ஒருபுறம் ஒதுக்கி வைப்பேன். 193 “என் சத்தத்திற்குச் செவிகொடுங்கள், என் ஆடுகள் என்னண்டை வரும். என்னிடத்தில் வரும் எல்லோருக்குமே, நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்து கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்”. அது சரியா? 194 இதோ அது சரியாக வேத வாக்கியங்களோடு இருக்கிறது. எவருமே அதைத் தவறென்று நிரூபிக்க முடியாது. அது உண்மை. எவருமே அதைத் தவறென்று நிரூபிக்க முடியாது. இதோ அது ஆவியின் வல்லமையில் இருக்கிறது. இயேசு செய்த அதே காரியங்களை அது செய்கிறது. இதோ புகைப்படத்தில் அவர் இருக்கிறார். அதே அக்கினி ஸ்தம்பமாய் அசைவாடி அதே கனிகளை, அதே ஆவியை, அதே உணர்ச்சி வேகத்தைக் கொண்டு அதே செயலை, அதே அடையாளங்களை அதே அற்புதங்களைச் செய்கிறார். அதுதான் காரியம். இந்தக் காலையில் தேவனுடைய சத்தத்திற்குச் செவிகொடுங்கள். அந்தச் சத்தம், “சாமுவேலே” என்றது. 195 அவன், “ஆம், ஆண்டவரே. ஆம், ஆண்டவரே. இதோ நான் இருக்கிறேன். இதோ உம்முடைய அடியேன். இதோ உம்முடைய அடியேன், நான் பின்பற்றுவேன்” என்றான். தேவன் அந்தப் பெண்மணியை ஆசீர்வதிப்பாராக. “நான்…” 196 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் நீங்கள் அதை மட்டுமீறிய அளவிற்கு உறுதிப்படுத்துகிறீர்கள்” என்று கூறலாம். அது உறுதியாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் குறிப்பிட்டுக் கூறுகிறேன். அது மரணத்திற்கும், ஜீவனுக்கும் இடைப்பட்டதாயிருக்கிறது. ஆகையால் நான் அதை உறுதிப்படுத்த வேண்டும். கர்த்தர் உங்களோடிருப்பாராக என்பதே என்னுடைய உத்தமமான ஜெபமாயிருக்கிறது. 197 இப்பொழுது, அவர்கள் இங்கே கட்டிடத்தின் அறைகலன்களை எடுப்பதற்கு முன்னர்,…நீங்கள் ஞானஸ்நான ஆராதனையைக் காணமுடியும். இந்த இடம் எல்லா நேரங்களிலுமே திறந்துள்ளது. நான்—நான் வாசித்துக்கொண்டிருக்கிறதை நீங்கள் காணும்படியாக. நான் ஏதோ ஒன்றைச் சரியாக வேத வாக்கியங்களிலிருந்து நேராக வாசிக்க விரும்புகிறேன். 198 பரிசுத்த மத்தேயு 16-வது அதிகாரத்தில் என்று நான் நினைக்கிறேன். இயேசு கிறிஸ்து பேதுருவினிடத்தில், “பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” என்றார். நீங்கள் யாவரும் அதை அறிவீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 199 பெந்தேகோஸ்தே நாளிலே தேவனுடைய ராஜ்ஜியம் அதனுடைய வல்லமையின் முழுநிறைவில் வந்திருந்தது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அப்பொழுது பேதுரு நின்று கொண்டிருந்தான். இப்பொழுது, இயேசு மரித்தோரிலிருந்து எழுந்திருந்தபோது, அவர் இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை வைத்திருக்கவில்லை. அது சரியா? [“ஆமென்”]. அவர் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவராயிருந்தாரேயன்றி, இராஜ்ஜியத்திற்கான திறவுகோல்களை உடையவராயில்லை. அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது அவர் என்னக் கூறினார் என்பது இங்கே இருக்கிறது. அவர்கள் இந்தக் காரியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, தங்களுடைய இருதயங்களை கடினப்படுத்தினார்கள். சரியாக பேதுரு என்ன கூறினார் என்பது இங்கே இருக்கிறது. 200 இப்பொழுது நான் வேத வாக்கியங்களை வாசிக்கையில் நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக கூர்ந்து கவனியுங்கள். அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லையே என்ற செய்தியை இங்கே எத்தனை பேர் கேட்டிருந்தீர்கள்? எனவே நாம் ஆதிநிலைக்கு திரும்பிச் சென்று, ஞானஸ்நானம் என்ன என்பதையும், உண்மையாகவே ஞானஸ்நானம் பண்ணப்படுதல் என்னவென்பதையும் பார்ப்போமாக. நாம் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும்? தெளிக்கப்பட்டா, ஊற்றப்பட்டா, அல்லது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலா?” 201 நான் எந்த ஊழியருக்கும் எந்த பேராயருக்கும், எவருக்கும், எங்கும், எந்த நேரத்திலுமே எந்த ஒரு நபராவது தெளிக்கப்பட்டதாகவோ, ஊற்றப்பட்டதாகவோ அல்லது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” ஞானஸ்நானம் பண்ணப்பட்டதாகவோ ஒரு வேத வாக்கியத்தை எனக்கு காண்பிக்கும்படி சவாலிட்டிருக்கிறேன் என்பது நினைவிருக்கட்டும். அது வெளிப்படையாயுள்ளது. அது வேத வாக்கியங்களில் இல்லை. இல்லை. 202 அது கத்தோலிக்க சபையால் துவங்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு போலியான கோட்பாடாயிருக்கிறது. கடைசி சீஷனின் மரணத்திற்குப் பின்னர் சுமார் அறுநூறு ஆண்டுகள் கழித்தே கத்தோலிக்கச் சபையால் தெளித்தல் உருவாக்கப்பட்டது. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி” என்பதும் அதே நேரத்தில்தான் மாற்றியமைக்கப்பட்டது. ஏனென்றால் கத்தோலிக்க ஜனங்கள் வித்தியாசமான தேவர்களை ஆராதிக்கின்றனர். அவர்கள் தேவனின் பதவிகளின் திரித்துவத்தை ஏற்பத்தினர். மூன்று தேவர்கள் அல்ல; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. அது அஞ்ஞான மார்க்கமாயுள்ளது. 203 ஒரு தேவன்தான் உண்டு. “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்”, “இஸ்ரவேலே கேள், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், ஒரே தேவன்”. 204 யூதன் எங்களிடத்தில், “பிதாவா, குமாரனா அல்லது பரிசுத்த ஆவியா, எது உங்களுடையத் தேவன்?” என்று கேட்டான். 205 அவைகள் ஒன்றே, அது ஒரே தேவன் மூன்று ஸ்தானங்களில் கிரியை செய்து தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதாகும். 206 முதலில் பிதாவில் தொடப்படக்கூடாதவராயிருந்தார். மலையின் மேல் தொங்கினார்; அதாவது ஒரு பசுவோ அல்லது எந்த மிருகமோ அந்த மலையைத் தொட்டால் கொல்லப்பட வேண்டும். 207 அதன் பின்னர் அவர் இறங்கி வந்தார். ஏனென்றால் அவர் ஆராதிக்கப்பட வேண்டுமென்று விரும்பினார். அவர் மனிதனுக்கு நெருக்கமானார், ஏனென்றால் அவர் மனுஷகுராமனானார். தேவன் அவருக்குள் இருந்தார். 208 அவர் அதைச் செய்தபோது, பின்னர் அவர், “இன்னும் கொஞ்சகாலத்திலே உலகம் என்னைக் காணாது, அதே சமயத்தில் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான்,” ஒரு தனிப்பட்ட பிரதிப்பெயர், “நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருப்பேன்”, “நான் தேவனிடத்திலிருந்து வந்தேன்” என்றார். என்ன? அக்கினி ஸ்தம்பம். “நான் தேவனிடத்திற்குத் திரும்பிப் போகிறேன்.” அவர் சென்றார். அவர் சென்றார். அதன் பின்னர் அவர் அதைக் கூறினபோது, அவர் தேவனண்டை திரும்பிச் சென்றார். 209 அதன் பின்னர் நாம் இக்காலையில் நம்முடைய பாடத்தில் பவுலை தமஸ்குவிற்குப் போகும் பாதையில் கண்டறிகிறோம். அவர் பவுலை வீதியில் கண்டார். அவர் அவனை அடித்து கீழே தள்ளினார். அப்பொழுது பவுல் மேலே நோக்கிப் பார்த்தபோது, அவர் என்னவாயிருந்தார்? மீண்டும் அக்கினி ஸ்தம்பமாயிருந்து, ஒரு ஒளியாய் அவனுடைய கண்களைக் குருடாக்கினார். 210 இயேசுவானவர் பூமியிலிருந்தபோது, அவர் என்ன செய்தார் என்பதை நோக்கிப் பாருங்கள். அந்த ஸ்திரீயினிடத்தில் அவளுடையப் பாவங்களைக் கூறி, இந்த எல்லாக் காரியங்களையும் செய்தார். அவர் “பிதாவானவர் எனக்கு முதலில் காண்பிக்கிறதைத் தவிர நான் வேறொன்றையும் செய்கிறதில்லை” என்றார். 211 அவர்கள் அவரிடத்தில் கேட்டனர். அதாவது, “நீர் ஏன் அங்குச் சென்று, அங்குள்ள ஜனங்களை குணமாக்கக் கூடாது?” என்று கேட்டனர். அவர் திரளானக் கூட்டத்தினூடாக கடந்துச் சென்றபோது, அங்கே முடமானவர்களும், சப்பாணிகளும், குருடர்களும், சூம்பின உறுப்புடையவர்களும் இருந்தனர். அவர் பெலங்குன்றிப்போன நிலையில் படுத்துக்கிடந்த ஒருவனை அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு கோளாறு கொண்டவனாய் ஒரு மரச்சட்டத்தின் மேல் படுத்துக்கிடந்த ஒரு மனிதனைக் குணப்படுத்தினார். அப்பொழுது “நீர் ஏன் அவர்களுடைய முழு கூட்டத்தையும் சொஸ்தமாக்கக் கூடாது?” என்று கேட்டனர். 212 அவர், “மெய்யாகவே, மெய்யாகவே…” என்றார். பரிசுத்த யோவான் 5:19ல், இப்பொழுது, “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” என்றார். 213 இதோ இந்தக் கடைசி நாட்களில் அவர் மீண்டும் வந்திருக்கிறார். விஞ்ஞான உலகம் அவரைக் குற்றஞ்சாட்ட முடியாது. சபையானது அவரை குற்றஞ்சாட்ட முடியாது. இதோ அவர் சபைக்குள்ளாகத் திரும்ப வந்து, அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறார். ஆவியானவரே! தேவன் ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்பவர்களை விரும்புகிறார். இதோ அவர் இருக்கிறார். 214 இதோ பெந்தேகோஸ்தே நாளில் பேதுரு பிரசங்கிக்கையில் அவர் கூறினது. இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லோரும் சாட்சிகளாயிருக்கிறோம். (நாம் சாட்சிகளாயிருக்கிறோமா?) அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும், கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும், நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது (அவர்கள் பக்தியுள்ள ஜனங்களாயிருந்தனர்) இதை அவர்கள் கேட்டபொழுது இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தரையும் பார்த்து; சகோதரரே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். 215 நாங்கள் அப்படியே போய் நல்லவர்களாக இருக்கலாமா? இல்லை, இல்லை. கவனியுங்கள். பேதுரு, நீர் இப்பொழுது இராஜ்ஜியத்திற்குரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறீர். “நீர் அவர்களுக்கு என்னச் சொல்லுகிறீர்?”, தேவனோ, “நீ அதைப் பூலோகத்தில் பூட்டும்போது, நான் அதைப் பரலோகத்தில் பூட்டுவேன்” என்றார். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது. 216 இன்னும் ஒரு வேதவாக்கியம். முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் இங்கே 19-ம் அதிகாரத்தில். பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு; நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். 217 பாப்டிஸ்டுகளே, அது உங்களுக்குள்ளே பதியட்டும். “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” அது ஒரு பிறப்பாயிருக்கிறது. ஒரு அறிக்கையிடுதல் அல்ல. …பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற (பாவ மன்னிப்பிற்காக அல்ல) ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 218 இப்பொழுது நான் உங்களை கலாத்தியர் 1:8க்கு கொண்டு செல்லட்டும். பவுல் தன்னுடைய நிரூபத்தை முடிக்கிறான். நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 219 நான் உங்களை கொரிந்தியர் 14ம் அதிகாரம், 38வது வசனத்திற்குக்கூட கொண்டு செல்லலாம், அங்கு இது கூறப்பட்டுள்ளது. ஒருவன் தன்னைத் தீர்க்கதரியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். 220 நாம் இதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம்? ஒவ்வொரு ஆதாரமும்…நான் உங்களுடைய ஸ்தானத்தில் இருந்து, கிறிஸ்தவ ஞானஸ்நானத்தின்படி ஞானஸ்நானம் பண்ணப்படாதிருந்தால் என்னுடையச் சபை என்ன நினைத்தாலும் அல்லது என்னுடையத் தாய் என்ன நினைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், என் ஆண்டவர் என்னக் கட்டளையிடுகிறார் என்பதையே நான் அறிந்து கொள்ள விரும்புவேன். 221 கர்த்தராகிய இயேசுவே, இப்பொழுது இவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள். நீர் ஒவ்வொரு இருதயத்திலும் கிரியைச் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் உமக்காகக் காத்திருக்கையில், ஞானஸ்நானம் பண்ணப்படும்படி தொட்டிடண்டையிருக்கிற இவர்களுக்குப் பரிசுத்த ஆவியை அருளும். நாங்கள் இந்தக் கூட்டத்தை இயேசுவின் நாமத்தில் உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். கர்த்தாவே அந்நாளில் எல்லா மனுஷருடைய இரத்தப்பழிக்கும் நீங்கலாகி, குற்றவாளியாயில்லாதிருப்பேனாக. ஏதோ ஒரு பாரம்பரியத்தினால் அல்லது ஏதோ ஒரு ஸ்தாபனத்தினால் அல்லது ஸ்தாபன அமைப்பினால் நிற்காமல் உம்முடைய வார்த்தையினால் நிற்பேனாக. ஆமென்.